ஊர்காவற்றுறை
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள தீவு
(ஊர்காவற்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஊர்காவற்றுறை (Kayts)[1] என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தீவுகளுள் ஒன்றான, லைடன் தீவு எனவும் அழைக்கப்படுகின்ற, லைடன் தீவில் உள்ள ஒரு ஊராகும். இங்கே ஒரு சிறிய துறைமுகமும் உண்டு. யாழ்ப்பாண அரசுக் காலத்திலும், போத்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலும், இத் துறைமுகம் நாட்டின் வடபகுதியிலிருந்த முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இத்துறைமுகத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன.
புனித பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இத்துறைமுகத்துக்கு 16ம் நூற்றாண்டில் வந்திறங்கி கத்தோலிக்க மதப் பரப்பலில் ஈடுபட்டார்[2].
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுதுணை நூல்கள்
தொகு- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.