இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் ஊறுகாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்தியர்களுக்குத் தயிர் சாதத்திற்கு ஊறுகாய் என்றால், வட இந்தியர்கள் சப்பாத்திக்கே ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். கிடைக்கும் அனைத்து வகைக் காய்களிலும் ஊறுகாய்கள் தயாரிக்கப்படுகின்றன. புளிப்பு சுவையுடன் கூடிய காய்கள் இதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்கள் இந்தியா முழுவதும் பிரபலமானவை.[1][2][3]

Aavakaaya
மாற்றுப் பெயர்கள்Aavakai
தொடங்கிய இடம்தென்னிந்தியா
பகுதிஆந்திரப் பிரதேசம்/தமிழ்நாடு
முக்கிய சேர்பொருட்கள்மா, aavalu (powdered mustard), powdered red chilli, salt and oil,allam
வேறுபாடுகள்Ginger

இது முறையாக பாதுக்காக்கப்பட்டால் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும் ஒரு பண்டம். அதே சமயம், கவனக்குறைவாக இருந்தால் ஒரு நாளிலேயே கெட்டுப்போய்விடும். ஊறுகாயைக் காற்றுப்புகாத கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களில் அடைத்து வைத்தல் நல்லது. எடுப்பதற்குக் கண்ணாடி, பீங்கான் கரண்டிகளைப் பயன்படுத்தினால், ஊறுகாய் விரைவில் கெட்டுப்போகாது. ஈரம் பட்டால் விரைவில் கெட்டுப் போகும். ஒரு சில ஊறுகாய்களை, எப்போதும் எண்ணெயில் மூழ்கி இருக்குமாறு செய்வதன் மூலம், பூஞ்சை பிடிக்காமல் காக்கலாம்.

மருத்துவ முக்கியத்துவம் தொகு

ஊறுகாய், அப்பளம் போன்றவை உப்பு அதிகம் உள்ள உணவுகளாதலால் மிகை இரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு, இதயச் செயலிழப்பு உள்ள நோயர்கள் ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாய் வகைகள் தொகு

  • மாங்காய் ஊறுகாய்
  • எலுமிச்சை ஊறுகாய்
  • நெல்லிக்காய் ஊறுகாய்

மேற்கோள்கள் தொகு

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊறுகாய்&oldid=3769189" இருந்து மீள்விக்கப்பட்டது