ஊற்று வீடு
ஊற்று வீடு (spring house, or springhouse) என்பது மிகச் சிறிய கட்டடம் ஆகும் வழக்கமாக இதில் ஒரே ஒரு அறைதான் இருக்கும். இந்த வீடானது ஊற்றின் மேலே கட்டப்பட்டுயிருக்கும். இந்த வீடானது கட்டப்படுவதன் நோக்கம் தண்ணீரை சுத்தமாக வைக்கவும், கீழே விழும் இலைகள்,மற்றும் விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும் ஆகும். இந்த வீட்டையொட்டி ஊற்று நீர் உள்ளதால் ஆண்டு முழுவதும் வசந்த வீட்டின் உள்ளே நிலையான குளிர்ந்த வெப்பநிலை நிலவுகிறது. இறைச்சி, பழம், பால் போன்ற பொருட்களை அங்கு வைப்பதால் அங்குள்ள குளிர்ந்த வெப்ப நிலையால் விரைவில் அப்பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இயற்கையான ஊற்றுகள் கிடைக்காத பகுதிகளில் இந்த தேவைக்காக கட்டப்படும் வீட்டின் கட்டமைப்பானது இயற்கையாக ஓடும் நீா் அல்லது சிறிய ஓடையின் மீது கட்டப்பட்டு இருக்கும். சூடான வெப்பநிலை நிலவும்போது ஒரு சிலர் இந்த வீட்டிலுள் திறந்த வாளியில் பாலை ஊற்றி கயிற்றில் கட்டி தொங்கவிட்டுவர் இதனால் பாலானது கெடாமல் அந்த வீட்டியில் பதனிலையோடு இருக்கும்.
மேற்கு வர்ஜீனியாவிலுள்ள டாமஹாக் பகுதியில் உள்ள டோமஹாக் ஊற்று இல்லம் 1994 இல் வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டில் பட்டியலிடப்பட்டது.[1]
-
கல்லால் கட்டப்பட்ட ஊற்று வீடு, இந்திய ஸ்ப்ரிங்ஸ் ஸ்டேட் பூங்கா.
-
சிக்காகோவில் உள்ள தி ப்ரூவரி ஸ்பிரிங் கட்டடம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2009-03-13.
வெளி இணைப்புகள்
தொகு- "The Spring Cellar". பார்க்கப்பட்ட நாள் 2007-05-13.