ஊழி மாற்றம்

ஊழி என்பது ஒரு கால அளவை. இது அல்பெயர் எண்ணால் குறிக்கப்படும் கால அளவை. தமிழ் இலக்கிய நெறியில் இது இவ்வாறு பொருள்படும். பரிபாடல் என்னும் நூல் ஐந்து வகையான ஊழிகளைக் குறிப்பிடுகிறது. கீரந்தையார் என்னும் புலவர் இதனைக் குறிப்பிடுகிறார்.[1]

ஊழிக் காலம் தொகு

  1. விசும்பு இல்லாத ஊழி - இது நெய்தல் என்னும் கால அளவுக் காலம் நிலவியது.[2]
  2. உருவம் இல்லாத ஊழி - இது குவளை என்னும் கால அளவுக் காலம் நிலவியது.[3]
  3. வளி ஊழி - இது ஆம்பல் என்னும் கால அளவுக் காலம் நிலவியது.[4]
  4. செந்தீ ஊழி - இது சங்கம் என்னும் கால அளவுக் காலம் நிலவியது.[5]
  5. மழை வெள்ள ஊழி - இது கமலம் என்னும் கால அளவுக் காலம் நிலவியது.[6]

திருமாலை வாழ்த்தும் இந்தப் பாடலில் இந்தச் செய்தி உள்ளது. திருமால் மழைவெள்ள ஊழிக் காலத்தில் கேழல் [7] உருவில் தோன்றி நிலவுலகை வெள்ளத்துக்கு மேலே தூக்கிக் காப்பாற்றினானாம்.

ஒப்புநோக்கல் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. தொல் முறை இயற்கையின் மதிய
    ... ..... ... மரபிற்று ஆக,
    பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
    விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,
    கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5
    உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
    உந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;
    செந் தீச்சுடரிய ஊழியும்; பனியடு
    தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
    உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10
    மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
    உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
    நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
    மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
    செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15 (பரிபாடல் 2)

  2. விசும்புதல் என்னும் உயிரோட்டம் இல்லாத ஊழி
  3. உயிரோட்டம் தோன்றி உருவம் இல்லாமல் உயிர் மட்டும் உலவிய ஊழி
  4. உயிரானது காற்று என்னும் உருவம் பெற்ற ஊழி
  5. காற்றின் உரசலால் வெப்பம் தோன்றிய ஊழி
  6. வெப்பம் தணிந்து நீராக மாறிய ஊழி
  7. பன்றி, வராக அவதாரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊழி_மாற்றம்&oldid=2746374" இலிருந்து மீள்விக்கப்பட்டது