ஊவாங் சியுச்சென்
ஊவாங் சியுச்சென் (Huang Xuechen) சீனநாட்டைச் சேர்ந்த ஒருங்கிசைந்த நீச்சல் வீராங்கனையாவார். 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1]
2013 ஆம் ஆண்டில் ஊவாங் சியுச்சென் | |||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | சீனர் | ||||||||||||||||||||||
பிறப்பு | 25 பெப்ரவரி 1990 சாங்காய், சீனா | ||||||||||||||||||||||
உயரம் | 1.75 மீ | ||||||||||||||||||||||
எடை | 61 கி.கி | ||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||
விளையாட்டு | நீச்சல் | ||||||||||||||||||||||
நீச்சல்பாணிகள் | ஒருங்கிசைந்த நீச்சல் | ||||||||||||||||||||||
சங்கம் | சாங்காய் | ||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஊவாங் சியுச்சென் 1990ஆம் ஆண்டில் சாங்காய் நகரத்தில் பிறந்தார். 1996ஆம் ஆண்டு நீச்சல் பயிற்சியைத் தொடங்க சாங்காய் பெய்கூவா பள்ளியில் சேர்ந்தார். 2000ஆம் ஆண்டில், இவர் ஒன்றிணைக்கப்பட்ட நீச்சல் விளையாட்டுக்கு மாறினார். 2002ஆம் ஆண்டில் ஊவாங் சியுச்சென் சாங்காய் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[2]
தொழில்
தொகு2005 ஆம் ஆண்டில் ஊவாங் தேசிய இளைஞர் அணியிலும், 2006 ஆம் ஆண்டில் தேசிய அணியிலும் இடம்பிடித்தார். 2009 ஆம் ஆண்டு சாண்டோங் மாகாணத்தில் நடந்த 11ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஊவாங் ஒருங்கிசைந்த நீச்சலில் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.[3]
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் குழு போட்டியில் ஊவாங் சியுச்சென் பங்கேற்றார். இப்போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2012 கோடைகால ஒலிம்பிக்கில் பெண்கள் இரட்டையர் (லியு ஓவுடன்) பிரிவிலும் மகளிர் அணிப் போட்டியிலும் பங்கேற்று முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். 2016 கோடைகால ஒலிம்பிக்கில், சன் வென்யனுடன் இரட்டையர் வகை போட்டியில் ஒரு பதக்கமும் அணிப் போட்டி நிகழ்வில் ஒன்றுமாக இவர் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Huang Xuechen Olympic Results". sports-reference. Archived from the original on 15 September 2015. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
- ↑ "揭秘花游美女黄雪辰:大哭当宣泄 抱大腿求教练". sports.sohu.com. 2011-07-17. https://sports.sohu.com/20110717/n313661666.shtml.
- ↑ "图文-全运花游吴怡文/黄雪辰双人摘铜 亭亭玉立". sina.com.cn. 2009-10-20. http://sports.sina.com.cn/o/p/2009-10-20/19054647557.shtml.
- ↑ "Huang Xuechen Bio, Stats, and Results". Olympics at Sports-Reference.com (in ஆங்கிலம்). Archived from the original on 17 April 2020. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019.