எஃப் ஏ கோப்பை
கால்பந்து கூட்டமைப்பு சவால் கோப்பை, அல்லது பொதுவாக எஃப் ஏ கோப்பை(FA Cup), இங்கிலாந்தில் நடத்தப்பெறும் கோப்பைப் பந்தயமாகும். இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந்து சங்க போட்டியாகும். இது போட்டியை நடத்தும் அமைப்பின் பெயரால், அழைக்கப்பெறுகிறது. இது பொதுவாக ஆடவர் போட்டியையே குறிக்கிறது. எனினும் மகளிருக்கும் இதே பெயரில் போட்டி நடைபெறுகிறது.
தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் | ITV ஈஎஸ்பிஎன் |
---|
முதன் முதலாக 1871-72 பருவத்தில் எஃப் ஏ கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் வேல்சு கால்பந்து கூட்டமைப்புகளுக்குள் வரும் அனைத்து கால்பந்து கழகங்களும் பங்குபெறலாம்.
இக்கோப்பையின் தற்போதைய வெற்றியாளர்கள் செல்சீ ஆவர். இவர்கள் 2012 இறுதியாட்டத்தில் லிவர்பூலை 2-1 என்ற கணக்கில் வென்று வாகை சூடினர். இது அவர்களது 7-வது எஃப் ஏ கோப்பையாகும். மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவதாகும்.