எக்சாசெல்சியன்

டெக்டோசிலிக்கேட்டு கனிமம்

எக்சாசெல்சியன் (Hexacelsian) என்பது BaAl2Si2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதுவோர் அரிய பேரியம் சிலிக்கேட்டு கனிமமாக கருதப்படுகிறது. இசுரேல் நாட்டின் ஆட்ரூரிம் வடிநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது [1]. இங்குதான் வெப்ப வெளியுரு மாற்ற ஆட்ரூரிய பாறைத் தொகுதிகள் உருவானதாகக் கருதப்படுகிறது [3].

எக்சாசெல்சியன்
Hexacelsian
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுBaAl2Si2O8
இனங்காணல்
படிக அமைப்புஅறுகோணம்
மேற்கோள்கள்[1][2]

பிற கனிமங்களுடன் தொடர்புதொகு

எக்சாசெல்சியன் என்ற பெயர் செல்சியன் கனிமத்துடன் தொடர்பு கொண்டுள்ளதைக் காட்டுகிறது. செல்சியன் என்பது பெல்ட்சுபார் குழுவைச் சேர்ந்த ஒற்றைச்சரிவச்சுக் கனிமமாகும். எக்சாசெல்சியன் ஒரு பல்லுருத்தோற்ற வகைக் கனிமமாகும். மேலும், இது சிம்ரைட்டு கனிமத்துடன் வேதியல் பண்புகளில் ஒத்திருக்கிறது [4] Beside celsian, it is chemically similar to cymrite.[2].

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Galuskina, I.O., Galuskin, E.V., Prusik, K., Vapnik, Y., Dzierżanowski, P., and Murashko, M., 2015. Hexacelsian, IMA2015-045. CNMNC Newsletter No. 27, October 2015, 1224; Mineralogical Magazine 79, 1229–1236
  2. 2.0 2.1 "Cymrite: Cymrite mineral information and data". பார்த்த நாள் 2016-03-12.
  3. "Hatrurim (Hatrurim Basin), Negev, Israel - Mindat.org". பார்த்த நாள் 2016-03-12.
  4. "Celsian: Celsian mineral information and data". பார்த்த நாள் 2016-03-12.

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சாசெல்சியன்&oldid=2806437" இருந்து மீள்விக்கப்பட்டது