எக்சா அம்மீன்பிளாட்டினம்(IV) குளோரைடு
எக்சா அம்மீன்பிளாட்டினம்(IV) குளோரைடு (Hexaammineplatinum(IV) chloride) என்பது Cl4H18N6Pt என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். உலோக அம்மீன் ஒருங்கிணைவுச் சேர்மமான [Pt(NH3)6]4+ சேர்மத்தின் குளோரைடு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. பிளாட்டினம்(II) அயனியுடன் இணைக்கப்பட்ட ஆறு அம்மோனியா (ஒருங்கிணைப்பு வேதியியலில் அம்மீன்கள் என அழைக்கப்படுகிறது) ஈந்தணைவிகளால் நேர்மின் அயனி உருவாகிறது. இது வெள்ளை நிறம் கொண்டு நீரில் கரையக்கூடிய திடப்பொருளாகக் காணப்படுகிறது.
அமைப்பு
தொகுபிளாட்டினம்(IV) ஒருங்கிணைவுச் சேர்மங்களில் குறிப்பாக எக்சா அம்மீன்பிளாட்டினம்(IV) குளோரைடு காந்தவியல் மற்றும் இயக்கவியல் செயலற்று உள்ளது. எ.கா. வலுவான அமிலங்களால் இது பாதிக்கப்படாது. நேர்மின் அயனி 18-எலக்ட்ரான் விதிக்குக் கீழ்ப்படிகிறது.
தயாரிப்பு
தொகுமெத்திலமீன் ஒருங்கிணைவுச் சேர்மமான [Pt(NH2CH3)4Cl2]Cl2 சேர்மத்தை அமோனியாவுடன் சேர்த்து சூடுபடுத்துவன் மூலம் எக்சா அம்மீன்பிளாட்டினம்(IV) குளோரைடு தயாரிக்கலாம்[1]
[Pt(NH3)6]4+ ஒருங்கிணைவுச் சேர்மம் நான்கு நேர்மின்னயனி ஒருங்கிணைவுச் சேர்மத்திற்கு ஓர் அரிய உதாரணமாகும். இதனுடைய இணை காரங்களாக [Pt(NH3)5NH2]3+ மற்றும் [Pt(NH3)4(NH2)2]2+ ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன. ref>B. Klein, L. Heck (1975). "Deprotonierung von Komplexliganden. I. Amidoamminkomplexe des Platin(IV)". Zeitschrift für anorganische Chemie 416 (3): 269–284. doi:10.1002/zaac.19754160311.</ref>
மேற்கோள்கள்
தொகு- ↑ L. N. Essen (1974). "Hexaammineplatinum(IV) Chloride". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. 15. p. 93. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132463.ch21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132463.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Hexaammineplatinum(IV) chloride தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.