எக்-மட்சுதா வினை
எக்-மட்சுதா வினை (Heck-Matsuda (HM) reaction) என்பது ஒலிபீன்களை பலேடியம் வினையூக்கியின் உதவியால் அரைலேற்றம் செய்யும் கரிம வேதியியல் வினையாகும். அரைல் ஆலைடுகள் மற்றும் முப்புளோரோமெத்தேன் சல்போனேட்டு எனப்படும் திரிப்ளேட்டுகளுக்கு மாற்றாகப் பயன்படும் அரீன் ஈரசோனியம் உப்புகள் இவ்வினையில் பயன்படுத்தப்படுகின்றன[1][2][3].
அரைல் ஆலைடு மின்னணு கவரிகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய முறையை விட அரீன் ஈரசோனியம் உப்புகளைப் பயன்படுத்துவதில் சில நன்மைகள் உள்ளன. உதாரணமாக பாசுபீனை ஈந்தணைவிகளாகப் பயன்படுத்த வேண்டிய அவசியமிருப்பதில்லை. இதனால் காற்றில்லா வேதி வினை என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது. மேலும் ஒரு காரம் வினையைக் கட்டுப்படுத்தும் நிலையிலிருந்தும் இச்செயல்முறை விடுபடுகிறது. பாரம்பரியமான எக் செயல்முறையைக் காட்டிலும் வினையின் வேகம் விரைவாக நிகழ்கிறது[4][2][3]
.
அல்லைலிக் ஆல்ககால்கள், இணை ஆல்க்கீன்கள், நிறைவுறா பல்லின வளையங்கள், கிளர்வூட்டப்படாத ஆல்க்கீன்கள் முதலிய வேதிச் சேர்மங்கள் இம்முறையில் அரைலேற்றப்படுகின்றன. பலேடியம் அசிட்டேட்டு (Pd(OAc)2)அல்லது டிரிசு(டைபென்சிலிடின் அசிட்டோன்)டைபலேடியம்(0) போன்ற எளிய கரிம பலேடியச் சேர்மங்களையும், பொதுவாகப் பயன்படுத்தக்கூடிய நலம்தரும் கரைப்பான்களையும் அறை வெப்பநிலையில் பயன்படுத்தக்கூடிய நன்மையும் இதனால் உண்டாகிறது[1]
.
எக்-மட்சுதா வினையில் தோன்றும் மூலக்கூறிடை மாறுபாடுகளுடன் ஆக்சிசன், நைட்ரசன் பல்லின வளையங்கள் உருவாக்கத்திற்குத் தேவையான மூலக்கூறிடை வளையமாதல் செயல்முறையும் கூடுதலாக தோன்றுகிறது.
எக்-மட்சுதா வினையின் வினையூக்கச் சுழற்சியானது முக்கியமான நான்கு படிநிலைகளைக் கொண்டுள்ளது. ஆக்சிசனேற்றக் கூட்டுவினை, இடம்பெயர்ந்து உட்புகுதல், பீட்டா நீக்கம் மற்றும் ஒடுக்க நீக்கம் முதலியன அந்நான்கு படிநிலைகளாகும்[1]
பல்லேடிய நேரயனியுடன் ஈரசோனியம் உப்புகளை சேர்த்தல் தொடர்பாக முன்மொழியப்பட்ட எக் வினையூக்கச் சுழற்சிவினையானது, கோர்ரியா மற்றும் சக தொழிலாளர்கள்[1] மேற்கொண்ட பெருமளவிலான நிறமாலையியல் ஆய்வுகள் மூலம் வலுப்படுத்தப்பட்டது. அரீன் ஈரசோனியம் உப்புகள் எக் வினையில் அணைவு இடைவினைகளில் பங்கேற்றதை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Taylor, Jason G.; Moro, AngéLica Venturini; Correia, Carlos Roque D. (2011). "Evolution and Synthetic Applications of the Heck-Matsuda Reaction: the Return of Arenediazonium Salts to Prominence". European Journal of Organic Chemistry 2011 (8): 1403–1428. doi:10.1002/ejoc.201001620.
- ↑ 2.0 2.1 Kikukawa, K (1981). "Reaction of diazonium salts with transition metals—III Palladium(0)-catalyzed arylation of unsaturated compounds with arenediazoium salts". Tetrahedron 37 (1): 31–36. doi:10.1016/S0040-4020(01)97711-7.
- ↑ 3.0 3.1 Kikukawa, Kiyoshi; Matsuda, Tsutomu (1977). "Reaction of Diazonium Salts with Transition Metals. I. Arylation of Olefins with Arenediazonium Salts Catalyzed by Zero Valent Palladium". Chemistry Letters (2): 159–162. doi:10.1246/cl.1977.159. https://archive.org/details/sim_chemistry-letters_1977-02_2/page/159.
- ↑ Darses, Sylvain; Pucheault, Mathieu; Genêt, Jean-Pierre (2001). "Efficient Access to Perfluoroalkylated Aryl Compounds by Heck Reaction". European Journal of Organic Chemistry 2001 (6): 1121–1128. doi:10.1002/1099-0690(200103)2001:6<1121::AID-EJOC1121>3.0.CO;2-3.