எங்க அம்மா ராணி

எங்க அம்மா ராணி (Enga Amma Rani) 2017 ஆம் ஆண்டு தன்சிகா நடிப்பில், இளையராஜா இசையில், எஸ். பாணியின் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4]. இப்படத்தில் தன்சிகா இரு குழந்தைகளின் தாயாக நடித்துள்ளார்.

எங்க அம்மா ராணி
இயக்கம்எஸ். பாணி
தயாரிப்புசி. முத்துகிருஷ்ணன்
இசைஇளையராஜா
நடிப்புதன்சிகா
வர்ணிகா
வர்ஷா
அனில் முரளி
நமோநாராயணன்
ஒளிப்பதிவுஏ. குமரன்
எஸ். ஆர். சந்தோஷ்குமார்
படத்தொகுப்புஏ. எல். ரமேஷ்
கலையகம்எம்.கே. பிலிம்ஸ்
வெளியீடு5 மே 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

மலேசியாவில் இரட்டைக் குழந்தைகளான தன் இரு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறாள் துளசி (தன்சிகா). அவளது குழந்தைகள் மீரா (வர்ணிகா) மற்றும் தாரா (வர்ஷா). அவளது கணவன் காணாமல் போனதால் அவளால் இந்தியாவுக்குச் செல்ல முடியவில்லை. நிதிப் பிரச்சனைகள் மற்றும் விசா தொடர்பான பிரச்சனைகள் காரணமாக அவள் அங்கேயே தங்க நேரிடுகிறது. ஒரு நாள் திடீரென தாரா வினோத நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறாள். மீராவை பரிசோதிக்கும் மருத்துவர் அவளுக்கும் அந்த நோயின் அறிகுறிகள் தென்படுவதாகக் கூறுகிறார்.

துளசி மீராவை ஒரு மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் செல்கிறாள். மீராவிற்குள் ஒரு ஆத்மா புகுந்ததை அறிகிறாள். அந்த ஆத்மா அவளை ஆட்டுவிப்பதையும் அறிகிறாள். அந்த ஆத்மா ஒரு சிறுமி சத்யாவின் ஆத்மா ஆகும். அந்த சிறுமியின் தந்தை தொழிலில் அதிக லாபம் கிடைப்பதைத் தன் நண்பனிடம் சொல்கிறான். அந்த நண்பன் அவரது மகளைக் கடத்துகிறான். பின் வேறொருவரைப் போல் தொலைபேசியில் பேசி பணத்தைக் கொடுக்காவிட்டால் அவனது மகளைக் கொல்வதாக மிரட்டுகிறான். இதை அந்த நண்பனிடமே சொல்லும் அந்தப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளிக்கப் போவதாக சொல்கிறார். இதனால் அவன் தன்னையும் தன் தந்தையையும் கொன்றதாக அந்த ஆத்மா கூறுகிறது. தன்னைக் கொன்றவனைக் கொல்லவே மீராவின் உடலில் புகந்ததாக கூறுகிறது ஆத்மா. அந்த சிறுமியின் ஆத்மா தன் மகள் மீராவின் உடலில் இருந்தால் அவளுக்கு அந்த நோயால் பாதிப்பு ஏற்படாது என்பதை அறியும் துளசி, தன் மகளின் உடலைவிட்டு நீங்க வேண்டாம் என்று வேண்டுகிறாள். ஆனால் அந்த இருவரைக் கொன்ற நண்பன் ஒரு விபத்தில் இறக்கிறான். இதனால் தான் மீராவின் உடலில் இனி இருக்க இயலாது என்று கூறி உடலைவிட்டு நீங்குகிறது ஆத்மா. அதன் பின் தன் மகளின் உயிரைக் காப்பாற்ற துளசி என்ன செய்தாள்? என்பதே அதிர்ச்சியூட்டும் முடிவு.

நடிகர்கள்

தொகு
  • தன்சிகா - துளசி
  • வர்ணிகா - மீரா
  • வர்ஷா - தாரா
  • சங்கர் ஸ்ரீஹரி - முரளி
  • நமோ நாராயணா - சொக்கலிங்கம்
  • அனில் முரளி - ராஜன்
  • மனோஜ் குமார் - சத்யாவின் தந்தை
  • நிதிஷ் வீரா
  • வைசாலி தணிகா - துர்கா
  • ரிந்து ரவி
  • மீனா கார்த்திக்
  • வி.ஐ.பி. கிருஷ்ணா
  • சுஜாதா தணிகா

தயாரிப்பு

தொகு

எஸ். பாணி இயக்குநர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது[5].

மேற்கோள்கள்

தொகு
  1. "எங்க அம்மா ராணி".
  2. "எங்க அம்மா ராணி".
  3. "எங்க அம்மா ராணி". Archived from the original on 2016-10-02. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
  4. "எங்க அம்மா ராணி".
  5. "படப்பிடிப்பு".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_அம்மா_ராணி&oldid=4161394" இலிருந்து மீள்விக்கப்பட்டது