எசுத்தர் வெப்பச்சிதைவு வினை
கரிம வேதியியலில் எசுத்தர் வெப்பச்சிதைவு வினை (Ester pyrolysis) என்பது ஒரு வெற்றிட வெப்பச் சிதைவு வினையாகும். இவ்வினை β-ஐதரசன் அணு உள்ள எசுத்தர்களை அத்னுடன் தொடர்புடைய காபொட்சிலிக் அமிலம் மற்றும் ஆல்க்கீனாக மாற்றுகிறது. மேலும் இவ்வினை Ei என்ற ஒற்றை மூலக்கூறு வினை வழிமுறை கொண்ட நீக்க வினையாகும்.
அக்கிரிலிக் அமிலத்தை 590 பாகை செல்சியசில் உள்ள ஈத்தைல் அக்கிரிலேட்டில் இருந்து தொகுத்துப் பெறுவது[1] இவ்வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். 1,4 பெண்டாதையீனை 1,5 பெண்டேன் டையால் டைஅசிட்டேட்டை 575 பாகை செல்சியசு[2] வெப்பநிலையில் தொகுத்துப் பெறுவது அல்லது 700 பாகை செல்சியசு வெப்பநிலையில்[3] சைக்ளோபியூட்டீன் வடிவமைப்பை உருவாக்குவதும் பிற எடுத்துக்காட்டுகளாகும்.