எச்சம் (சொல்)

எச்சம் என்னும் சொல் எஞ்சிநிற்கும் பொருளை உணர்த்தும். அது பயன்படுத்தியது போக மிச்சமாக இருக்கும் ஒன்று. திருக்குறளில் இச்சொல் பல்வேறு பொருளைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புகழ்-இகழ், தக்கார்-தகவிலார் போன்றவை

வாழ்வுக்குப் பிறகு எஞ்சி நிற்பது எச்சம். அது அவரைப் பற்றி மற்றவர்கள் நினைப்பது. இது இசை என்னும் எச்சம் [1] தக்கார் தகவிலார் என்னும் எச்சம். [2] இந்த எச்சம் மனிதனுக்கு உள்ள ஆசையால் பிறக்கும். [3]

மக்கள்

ஒருவரது வாழ்க்கையின் பயனாய் எஞ்சி நிறபது அவர் பெற்றெடுத்த மக்கள். [4]

கழிவுப்பொருள்

எச்சம் என்பது உண்ட உணவின் கழிவுப்பொருள். [5]

அடிக்குறிப்பு

தொகு
  1. திருக்குறள் 238
  2. தக்கார் தகவிலார் என்பது அவரவர்
    எச்சத்தால் காணப்படும் 114
  3. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
    அவா உண்டேல் உண்டாம் சிறிது 1075
  4. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
    எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து 112
  5. ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
    நாணுடைமை மாந்தர் சிறப்பு 1012
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சம்_(சொல்)&oldid=1599894" இலிருந்து மீள்விக்கப்பட்டது