எச். ஆர். கேசவ மூர்த்தி

எச். ஆர். கேசவ மூர்த்தி ( பிப்ரவரி 22, 1934 - டிசம்பர் 21, 2022) ஓர் இந்திய கமகா (கதை சொல்லி) விரிவுரையாளர் மற்றும் குரு ஆவார்.[1] 1998 இல் கர்நாடக அரசால் சாந்தலா நாட்டிய சிறீ விருதும், 2022 இல் இந்திய அரசால் கலைத் துறையில் பத்மசிறீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

எச்.ஆர். கேசவ மூர்த்தி
பிறப்பு(1934-02-22)22 பெப்ரவரி 1934
இறப்பு21 திசம்பர் 2022(2022-12-21) (அகவை 88)
ஹோசஹள்ளி, கர்நாடக மாநிலம், இந்தியா
பணிபாடகர் & கமகா (கதை சொல்லி)
பிள்ளைகள்1
விருதுகள்See list

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கேசவ மூர்த்தி பிப்ரவரி 22, 1934 அன்று வேதபிரம்ம ராமசுவாமி சாஸ்திரிக்கு கமகா கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். ஹோசஹள்ளியில் வசித்து வந்தார்.[2][3] இவருக்கு திருமணமாகி 1 மகள் இருந்துள்ளார். இவர் திசம்பர் 21, 2022 அன்று ஹோசஹள்ளியில் உள்ள இவரது வீட்டில் காலமானார்.[1]

தொழில்

தொகு

கமகா துறையில் குறிப்பிடத்தக்க நிபுணரான மூர்த்தி,[4] தனது தந்தையிடமும் பின்னர் வெங்கடேசய்யாவிடமும்[1] பயிற்சி பெற்றார். கன்னட இதிகாசங்களான குமாரவியாச பாரதம் மற்றும் ஜைமினிஸ் பாரதத்தை விளம்பரப்படுத்தினார்.[5] இவரது இசையின் மாறுபாடு பின்னர் கேசவ மூர்த்தி கரானா என்று அறியப்பட்டது.[2]

விருதுகள்

தொகு

கேசவ மூர்த்திக்கு 1998 ஆம் ஆண்டு சாந்தலா நாட்டிய ஸ்ரீ விருது கர்நாடக அரசால் பாரம்பரிய நடனத்திற்கான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டில், அவருக்கு கர்நாடக அரசால் ராஜ்யோத்சவ பிரஷஸ்தி மற்றும் கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது.[6][7] 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அவருக்கு நாட்டின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கியது,[8] கர்நாடகாவில் கலை வடிவில் கதைசொல்லும் காவ்ய வசனத்தைப் பாதுகாக்க, கலைத் துறையில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.[5][9]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Padma Shri awardee H.R. Keshava Murthy is no more" (in en-IN). தி இந்து. 21 December 2022. https://www.thehindu.com/news/national/karnataka/padma-shri-awardee-hr-keshava-murthy-is-no-more/article66289112.ece. 
  2. 2.0 2.1 "Hosahalli celebrates Gamaka exponent Keshava Murthy's Padma Shri". The New Indian Express. 27 January 2022. பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.
  3. "Festive mood at Hosahalli" (in en-IN). The Hindu. 26 January 2022. https://www.thehindu.com/news/national/karnataka/festive-mood-at-hosahalli/article38329407.ece. 
  4. K. N. Venkatasubba Rao (18 May 2001). "Govt. to choose deserving candidates". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 November 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20021113233003/http://www.hinduonnet.com/2001/05/18/stories/04182106.htm. 
  5. 5.0 5.1 {{Cite web |date=26 January 2022 |title=Among Padma Shri awardees are Kashmir's Karate Kid, Haryana doctor behind world's 1st IVF buffalo calf |url=https://www.tribuneindia.com/news/haryana/among-padma-shri-awardees-are-kashmirs-karate-kid-haryana-doctor-behind-worlds-1st-ivf-buffalo-calf-364639 |access-date=25 November 2022 |website=[[The Tribune (Chandigarh |language=en |agency=Press Trust of India}}
  6. "Know Padma Shri awardees from Karnataka: Dalit poet Siddalingaiah, scientist Ayyappan and others". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 26 January 2022. பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.
  7. "Padma Awards 2022: Meet awardees conferred in the field of art for their distinguished contribution". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 29 March 2022. பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.
  8. Khurana, Suanshu (28 April 2022). "Padma Shri awardee removed from govt accommodation as eviction starts". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.
  9. Athrady, Ajith (25 January 2022). "Five from Karnataka honoured with Padma Shri awards". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._ஆர்._கேசவ_மூர்த்தி&oldid=3793295" இலிருந்து மீள்விக்கப்பட்டது