எச். எம். டி நெல்

எச். எம். டி என்பது ஒரு நெல்வகையாகும். இதை மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயியான தாதாஜி கோப்ரகடே என்பவர் உருவாக்கினார்.

வரலாறு

தொகு

1983ஆம் ஆண்டில் அப்போது மகாராட்டிரத்தில் மிகவும் பிரபலமாக இருந்த அரிசி வகையான பட்டேல் 3 என்ற இரகத்தையே கோப்ரகடே தனது வயலில் விதைத்து வெள்ளாமை செய்து வந்தார். அதே நிலத்தில் தோற்றத்தில் வித்தியாசப்பட்டிருந்த நெல் நாற்றுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைப் படிப்படியாகப் பயிர் செய்யத் தொடங்கி புதிய இரகமாக உருவாக்கினார். பின்னர் ஒருகட்டத்தில் மற்ற விவசாயிகளுக்கும் தனது விதை நெல்லைத் அளித்தார். அவரது விதைநெல்லானது வீரியம் மிக்கதாகவும் அதில் விளைந்த அரிசி சுவையும், தனி நறுமணம் கொண்டதாகவும் இருந்தது.

கோப்ரகடே உருவாக்கிய விதை நெல்லை அப்பகுதி நிலச்சுவான்தாரான பீம்ராவ் ஷிண்டே தன் நிலத்தில் பயிரிட்டார். பின்னர் அந்த விதை நெல்லைச் சந்தைக்கு விற்க எடுத்துச் சென்றார். அந்த நெல்லின் பெயர் என்னவென்று வியாபாரிகள் கேட்டபோது. அப்போது பிரபலமாக இருந்த ‘எச்.எம்.டி.’ கடிகாரத்தின் பெயரை ஷிண்டே சொன்னார். அப்படித்தான் எச்.எம்.டி. என்று அதற்குப் பெயர் ஏற்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. மீனா மேனன் (30 சூன் 2018). "நெல்லில் எழுதப்பட்ட பெயர்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எம்._டி_நெல்&oldid=3576733" இலிருந்து மீள்விக்கப்பட்டது