எச். கே. குமாரசாமி

இந்திய அரசியல்வாதி

எச். கே. குமாரசாமி (H. K. Kumaraswamy)(பிறப்பு 31 மே 1955), என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆறு முறையாக கருநாடக சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரும் ஆவார். இவர் 2018ஆம் ஆண்டு நிலவரப்படி, சகலேஷ்பூர்[1] சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஜனதா தளம் நாடாளுமன்ற வாரிய தலைவராகவும் உள்ளார்.

எச். கே. குமாரசாமி
H. K. Kumaraswamy
சட்டமன்ற உறுப்பினர்-கர்நாடக சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2008
முன்னையவர்எச். எம். விசுவநாத்
தொகுதிசக்லேஷ்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மே 1955 (1955-05-31) (அகவை 68)
குப்பகடே
அரசியல் கட்சிஜனதா தளம் (1984 முதல்)
துணைவர்சி.டி.சஞ்சலா குமாரி
பிள்ளைகள்3
வாழிடம்பெங்களூர்
கல்விஇளநிலை அறிவியல், இளநிலை கல்வியியல், இளநிலை சட்டம்
தொழில்அரசியல்வாதி

குமாரசாமி ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் மாநிலத் தலைவராகவும்,[2][3] மற்றும் கருநாடக அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

குமாரசாமி சி. டி. சஞ்சலா குமாரியை மணந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  2. "H.K. Kumaraswamy named Karnataka JD(S) chief".
  3. "In revamp, JD(S) names H.K. Kumaraswamy as Karnataka unit chief". LiveMint.
  4. "Karnataka Cabinet Expansion: Full List Of HD Kumaraswamy Ministers". www.india.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._கே._குமாரசாமி&oldid=3721402" இலிருந்து மீள்விக்கப்பட்டது