எடிசன் விளைவு

தாமஸ் அல்வா எடிசன்(Edison effect) மின் விளக்குக்கு ஏற்ற கடத்தி பற்றி ஆராய்ச்சியில் இருந்தபொழுது, மின்குமிழ் சுற்றுடன் தொடர்பில்லாத ஒரு கம்பி அருகில் இருந்தது. எடிசன் நேர் மின்னழுத்தத்தை பிரயோகித்தபொழுது ஒரு மின் பொறி அருகிலிருந்த கம்பிநோக்கி பாய்ந்தது. ஆனால், எதிர்ம மின்னழுத்ததை பிரயோகித்தபொழுது அப்படி நிகழவில்லை. இவ் முக்கிய விளைவை எடிசன் அவதானித்து காப்புரிமை பெற்றதால், இவ் விளைவு எடிசன் விளைவு என கூறப்படுகின்றது. இதுவே இருமுனையம், திரிதடையம் ஆகியவறுக்கு பின்னர் அடிப்படையாக அமைந்தது.

வெப்ப அயனிகள் (Thermions) உலோகங்களில் ஏராளமான தனித்த அயனிலுள்ளன. இந்த உலோகங்களை சூடாக்கும் போது,எலக்ட்ரான்கள் அதிக ஆற்றலை வெப்பத்திலிருந்து பெற்றுக் கொள்கின்றன. இவ்வாற்றல் ஒரு திட்ட அளவைவிட அதிகமாக உள்ளபோது, எலக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவ்வகை அயனிகள் வெப்ப அயனிகள் எனப்படுகின்றன. இவ்வகை அயனிகளின் சீரான ஓட்டமே வெப்ப அயனி மின்னோட்டத்திற்குக் காரணமாகும். எக்சு கதிர் குழாய்களில் வெப்ப அயனிகளே , இலக்கில் மோதி எக்சு கதிர்களைத் தோற்றுவிக்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. Paxton, William Francis (18 April 2013). Thermionic Electron Emission Properties of Nitrogen-Incorporated Polycrystalline Diamond Films (PDF) (PhD dissertation). Vanderbilt University. hdl:1803/11438. Archived from the original on 2016-11-23. பார்க்கப்பட்ட நாள் 2022-12-16.
  2. "Thermionic power converter". Encyclopedia Britannica. Archived from the original on 2016-11-23. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.
  3. Frederick Guthrie (October 1873). "On a relation between heat and static electricity". The London, Edinburgh, and Dublin Philosophical Magazine and Journal of Science. 4th 46 (306): 257–266. doi:10.1080/14786447308640935. https://books.google.com/books?id=U08wAAAAIAAJ&pg=PA257. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடிசன்_விளைவு&oldid=3769226" இலிருந்து மீள்விக்கப்பட்டது