எடுத்துக்காட்டு உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது.உவமையும் உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வந்து அவ்விரண்டையும் கூட்டுவிக்கின்ற இடைச்சொல்லான உவம உருபு இவ்விரு தொடர்களின் இடையே வெளிப்படாமல் மறைந்து நின்று பொருள் தருமானால் அஃது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும் .

சான்று:

உவமையணியின் சான்று

திருக்குறள் -396.

விளக்கம் : மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.

இங்கு மணற்கேணி தோண்டப்படுவது உவமையாகும். மனிதர் கற்பது உவமேயம் ஆகும். போல என்னும் உவம உருபு வெளிப்பட்டு வரவில்லை.