எடுத்துரைப்பியல் திறனாய்வு

எடுத்துரைப்பியல் திறனாய்வு (narrative criticism) என்பது, எடுத்துரைப்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தும் ஒரு திறனாய்வு ஆகும். மனிதருடைய அன்றாட வாழ்வின் அனுபவங்களில் இருந்து பொருள் கொள்வதற்கு ஒரு பேச்சாளர் அல்லது எழுத்தாளர் எடுத்துரைக்கும் கதைகள் எவ்வாறு உதவுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதே இத்திறனாய்வின் நோக்கம்.

இலக்கியம் என்பது படைப்பாளிக்கும், வாசகருக்கும் இடையிலான தொடர்பாடலுக்கான ஊடகம். எடுத்துரைப்பியல் உண்மையான படைப்பாளியையோ, உண்மையான வாசகரையோ கருத்தில் கொள்வதில்லை. பதிலாக, படைப்புக்குள் இருந்தே உட்கிடையான படைப்பாளியையும், உட்கிடையான வாசகரையும் எடுத்துரைப்பியல் கருத்தில் கொள்கிறது. இதன் மூலம் இவ்வகைத் திறனாய்வு படைப்பாளியையோ, வாசகரையோ மையப்படுத்தாமல் படைப்பின் உரையையே மையப்படுத்துவதாக உள்ளது.

இது விவிலியம் சார்ந்த திறனாய்வுப் பின்னணியிலேயே தோற்றம் பெற்றுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் சமயம் சாராத பயன்பாடு மிகக் குறைவே. அவ்வாறு பயன்படுத்தப்படும் வேளைகளிலும் அது வேறு திறனாய்வு அணுகுமுறைகளின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.

குறிப்புக்கள் தொகு

உசாத்துணைகள் தொகு

  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும் தொகு