எடுவர்டோ செர்ரா
எடுவர்டோ செர்ரா (Eduardo Serra, பிறப்பு: அக்டோபர் 2, 1943) ஓர் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் போர்த்துகல் நாட்டின் லிஸ்பனில் பிறந்தவர். இரு முறை தனது ஒளிப்பதிவிற்காக ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டிருகிறார்.
எடுவர்டோ செர்ரா | |
---|---|
பிறப்பு | 2 அக்டோபர் 1943 லிஸ்பன், போர்த்துக்கல் |
அறியப்படுவது | ஒளிப்பதிவாளர் |
இவர் 1960 முதல் 1963 வரை பொறியியல் படிப்பை லிஸ்பன் இன்ஸ்ட்டிட்டியூட்டோ சுப்பீரியர் டெக்னிக்கோ வில் (Lisbon's Instituto Superior Técnico) படித்தார். மாணவர் புரட்சியில் ஈடுபட்டதால் நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் பிரான்ஸ் நாட்டிற்குக் குடிபெயர்ந்தார். அங்கு வாகிரார்ட் பிலிம் ஸ்கூலில் (Vaugirard film school) படித்தார். 1966 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் இரண்டாம் பட்டப்படிப்பாக வரலாற்றுக் கலை மற்றும் கட்டிடக்கலையில் (Art History and Archeology) கல்வியை முடித்தார்.[1] ப்ளட் டையமண்ட் (Blood Diamond-2006), ஹாரி பார்ட்டர் அண்டு டெட்லி ஹாலோஸ்-பாகம் 1 (Harry Potter and the Deathly Hallows– Part 1-2010) மற்றும் டெட்லி ஹாலோஸ்- பாகம் 2 (Deathly Hallows – Part 2-2011) ஆகியவை இவர் பணியாற்றிய முக்கியத் திரைப்படங்கள் ஆகும்.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "AIP Cinema". AIP Cinema. 1943-10-02. Archived from the original on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2011-08-18.