எட்டப்பன்

எட்டப்பன் தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்களுள் ஒருவராவார்.

சூரங்குடி எனும் ஊரில் எட்டப்பன் என்ற அருந்ததியர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மாட்டின் ஈரல் மிகவும் பிடிக்கும் என்பதால், கேட்டுப் பெற்றோ, களவு செய்தோ ஈரலை தின்றுவந்தார். அவ்வாறு ஈரலுக்காக மாட்டினை களவு செய்வதை அறிந்த மாட்டின் உரிமையாளர்கள், எட்டப்பனை பிடித்து மரணதண்டனை கொடுக்க முடிவெடுத்தனர்.

தன்னுடைய இறுதி ஆசையாக தன் உறவினர்களைக் காண எட்டப்பன் ஆசை கொண்டார். ஆனால் எட்டப்பன் ஊரிலிருந்து யாரும் அவரைக் காண வரவில்லை. தன்னை விடுவித்தால் தன்னுடைய ஊர் சென்று உறவுகளை கண்டுவருவதாக வேண்டினார். எட்டப்பனுக்கு பதிலாக மற்றோருவர் இங்கு தண்டனை அனுபவித்தால் எட்டப்பனை விடுவதாகக் கூறினர்.

மேட்டுப்பட்டியிருந்த அருந்ததியர் ஒருவர் எட்டப்பனுக்குப் பதிலாக தண்டனை அனுபவிக்க ஒப்புக் கொண்டார். எட்டப்பனும் ஊருக்கு சென்று உறவுகளைச் சந்தித்து திரும்பி வந்தார். அவருக்கு மரணதண்டனை நிறைவ்ற்றப்பட்டது. தனக்காக தண்டனை அனுபவித்த மேட்டுப்பட்டி மக்கள் தன்னை வணங்கினால் ஊருக்கு நல்லது செய்வதாக எட்டப்பன் கூறினார். அதனால் அருந்ததியினரால் கடவுளாக வழிபடப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டப்பன்&oldid=1674489" இருந்து மீள்விக்கப்பட்டது