எட்டயபுரம் வெங்கடாசலபதி கோயில்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஊரில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோவிலாகும். இது எட்டயபுரத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான கோவில்களில் ஒன்றாகும்.

கோவில் வரலாறு

தொகு

இந்த ஆலயத்தைக் கட்டிப் பிரதிஷ்டை செய்ததாகக் குறிப்பிடப்படுபவர் 27வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கிடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யன். இங்கு 885 எனக் குறிப்பிடப்படுவது ஆங்கில ஆண்டு அல்ல. இது நூலில் கொல்லம் ஆண்டு என்று குறிப்பிடப்படுகின்றது. ஆக ஆங்கில வருஷம் 1705லிருந்து 1725வரை பட்டத்து ராஜாவாக இருந்த ஜெகவீரராம வெங்கிடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யனவர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. அரண்மனையிலிருந்து சற்று தள்ளியிருக்கும் இந்தக் கோயில் 300 வருடப் பழமை வாய்ந்தது.

கோவில் பராமரிப்பு

தொகு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலுக்கு அறங்காவலர்களாக எட்டயபுரம் பாளையக்காரர் வாரிசுதாரர்கள் இருந்து வருகின்றனர்.

பூசைகள்

தொகு

இந்தக் கோயிலில் தினசரி பூஜை செய்யப்பட்டு வருகின்றன. மார்கழி மாதம் நடக்கும் பஜனை, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடத்தப் பெறுகின்றன.

மேற்கோள்

தொகு