எட்டு ஒழுக்கங்கள்

குழுவின் எட்டு துறைகள் - சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் முறை

எட்டு ஒழுக்கங்கள் (8 Discipline/8D) என்பது போர்ட் தானுந்து நிறுவனத்தால் உருவக்கப்பட்ட சிக்கல் தீர்வு வழிமுறை ஆகும். பொதுவாக பொறியாளர்கள் மற்றும் பிற தொழில் நிபுணர்களால் பயன்படுத்தபடுகின்றது.

வரலாறு

தொகு

இது சிக்கலுக்கான மூலக்காரணத்தை அறிய மற்றும் அதற்கான நிரந்தர தீர்வுகளை தேர்ந்தெடுக்க போர்ட் தானுந்து நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு மற்றும் பயன்படுத்தபட்டு வரும் முறைப்படியான செயல்முறை. அமெரிக்க ராணுவமும் இரண்டாம் உலகப்போரின் போது இம்மாதிரியான செயல்முறையினை மேம்படித்தி அதற்கு ”அமெரிக்க ராணுவ வழக்கம் 1520 நியமத்திற்கு ஒவ்வாத பொருளுக்கான தீர்வு மற்றும் இட மாற்ற ஒழுங்கமைப்பு” என்று பெயரிட்டுள்ளது. ஆயினும் இதனுடைய மூலம் இன்னும் அறியப்படாமல் உள்ளது.

உபயோகம்

தொகு
  1. மூலக்காரணம் தெரியாத சிக்கல்கள்.
  2. சிக்கல்களின் மீள்நிகழ்வு.
  3. தனி மனித திறனால் கண்டறியபடமுடியாத மூலக்காரணம்.
  4. வாடிக்கையாளர்களின் புகார்கள்.
  5. நெருக்கடி நிலைக்கான பதில் செயல் (Emergency Response Action)

சிக்கலின் தீவிரம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் பொருத்து நெருக்கடி நிலையென்று அறிவித்து நெருக்கடி நிலைக்கான பதில் செயலை கண்டறிந்து அதனை செயல்படுத்தவேண்டும். இதற்கு “நெருக்கடி நிலைக்கான பதில் செயல்” என்று பெயர்.

ஒழுக்கங்கள்

தொகு
  • ஒ1 (D1) - அணியினை நிறுவுதல் (Establish a team):
சிக்கல் ஏற்பட்ட துறை, சிக்கலின் தீவிரம், சிக்கலை நீக்க தேவைப்படும் அறிவு மற்றும் சிக்கலை நீக்க தேவைப்படும் ஆற்றல் இதனை பொருத்து நெறிஞர்கள் அடங்கிய ஓர் அணியினை நிறுவி அந்த அணிக்கான தலைவரையும் நிர்ணயிக்கவேண்டும்.
  • ஒ2(D2) - சிக்கலை விவரித்தல் (Describe the problem):
சிக்கலை தெளிவாகவும் துல்லியமாகவும் விவரிக்க வேண்டும். விவரங்கள் எது தவறாக உள்ளது, எவ்வளவு தவறாக உள்ளது என்பதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சிக்கலை விவரிக்க பின்வரும் பகுப்பாய்வு உதவும்.
  • இருப்பு / இல்லாதது பகுப்பாய்வு (Is / Is not analysis)
  • ஒ3 (D3) - தற்காலிக உள்ளடக்கும் செயல் (Develop interim containment action (ICA)):
தற்காலிக உள்ளடக்கும் செயலை உடனடியாக செயல் படுத்தி, இந்த செயல், விளைவுக்கான தற்காலிக தீர்வுக்கான செயல் முறையே என்று உறுதிப்படுத்தவேண்டும். தற்காலிக உள்ளடக்கும் செயலின் வினைவுறுத்திறனை தகுதியாக்கவேண்டும்.
  • ஒ4 (D4) - மூலக்காரணம் அறிதல், உறிதிபடுத்துதல் மற்றும் மூலக்காரணம் தற்போதய கட்டுப்பாட்டு நிலையிலிருந்து தப்பிக்கும் காரணதேர்ந்தெடுப்பு (Define and Verify Root cause and Escape point):
மூலக்காரணத்தை பின் வரும் செயல் முறைகளை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கலாம்.
  1. காரண-காரிய வரைபடம் (Cause and effect diagram).
  2. ஐந்து “ஏன்” பகுப்பாய்வு (5 Why analysis).
  • ஒ5 (D5) - மூலக்காரணத்திற்கான நிரந்தர தீர்வின் செயல்முறை தேர்ந்தெடுத்தல் மற்றும் சிக்கல் கட்டுபாட்டிலிருந்து தப்பிக்காமல் இருக்க புதிய சரியான கட்டுபட்டை தேர்ந்தெடுத்தல் (Choose and Verify Permanent corrective action (PCA)):
ஒவ்வொரு சிக்கலுக்கும் பல காரணங்கள் இருக்கும். அவற்றிலிருந்து மிகச்சிறந்த மற்றும் மிகச்சரியான மூலக்காரணத்தை தேர்வு செய்யவேண்டும்.
  • ஒ6 (D6): நிரந்தர தீர்வுக்கான செயல் முறையை செயல் படுத்தல் மற்றும் அச்செயல் முறை நிரந்தர தீர்வை அளிக்குமா என்று உறிதிப்படுத்துதல் ( Implementation and Validation of Permanent corrective action):
தற்காலிக தீர்வுக்கான செயல் முறையை நீக்கி நிரந்தர தீர்வுக்கான செயல் முறையை செயல் படுத்தி இச்செயல் முறை நிரந்தர தீர்வை அளிக்கிறதா என்று உறுதிப்படுத்தவேண்டும்.
  • ஒ7 (D7): மீள் நிகழ்வு தடுத்தல் (Prevent reoccurrence):
நிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறுதி செய்யப்பட்ட பிறகு மீள் நிகழ்வு நிகழாமல் இருக்க, கொள்கையில், முறை அமைப்பில் மற்றும் நடைமுறையில் சிறுமாற்றம் செய்யவேண்டும்.
  • ஒ8 ( D8 ): அணி பாராட்டு மற்றும் அங்கீகரிப்பு (Team recognition ):
நிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறிதி செய்யப்பட்ட பிறகு மற்றும் சிக்கல் முழுமையாக தீர்ந்த பிறகு, நிரந்தர தீர்வை கண்டறிந்த அணியையும், அணியில் உள்ளவர்களின் பங்களிப்பையும் பாராட்டவேண்டும். அணியை அங்கீகரிக்கவேண்டும்.

ஆவணமாக்குதல்

தொகு

நிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறிதி செய்யப்பட்ட பிறகு மற்றும் சிக்கல் முழுமையாக தீர்ந்த பிறகு, இதனை முறைப்படி ஆவணமாக்குதல் வேண்டும். இதனால் எதிர்காலத்தில் வேரு ஓர் இட்த்தில் இது போன்ற சிக்கல்கள் நிகழுமேயானால் எளிதாக தீர்க்க முடியும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டு_ஒழுக்கங்கள்&oldid=2756159" இலிருந்து மீள்விக்கப்பட்டது