எட்ரப்பள்ளி வேல்மலை முருகன் கோயில்
வேல்மலை முருகன் கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், எட்ரப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.
அருள்மிகு வேல்மலை முருகன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | எட்ரப்பள்ளி |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | முருகன் |
தாயார்: | வள்ளி, தெய்வாணை |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆடிக் கார்த்திகை |
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலானது அரைக்கோள வடிம மலையின்மீது அழகுற உள்ள ஒரு சிறு கோயிலாகும். மலையின் கீழே விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. மலைமீது செல்ல காங்ரீட் சாலை போடப்பட்டுள்ளது. இக்கோயில் மகாமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கருவறையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் நின்றகோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் கோயிலுக்கு எதிரே 200 அடி தொலைவில் இடும்பன் சந்நிதி உள்ளது.
வழிபாடு
தொகுஒவ்வொரு திங்கள், வெள்ளிக் கிழமையன்று மற்றும் கிருத்திகை சஷ்டியன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆடிக் கார்த்திகை விழாவானது ஆண்டு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
தொகுஇந்த முருகன் கோயிலானது கிருட்டிணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருட்டிணகிரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள குருபரபள்ளி கிராமத்தில் இருந்து வடக்கில் தீர்த்தம் செல்லும் சாலையில் உள்ள எட்ரப்பள்ளி என்ற ஊரில் அமைந்துள்ளது.[1]