எட்வர்டு தனிநபர் விருப்பத்தேர்வு பட்டியல்
எட்வர்ட் தனிநபர் விருப்பத்தேர்வு பட்டியல் (Edwards Personal Preference Schedule) வாசிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியரும் உளவியலாளருமான ஆலன் எல். எட்வர்ட்சு என்பவரால் உருவாக்கப்பட்ட பட்டியலாகும். எட்வர்ட் தனிநபர் விருப்பத்தேர்வு பட்டியலானது கட்டாய வாய்ப்பு, புறவயமுறை சார்ந்த மதிப்பீடல்லாத ஆளுமை கட்டமைப்பு சோதனை முறையாகும். எட்வர்ட் தனிநபர் விருப்பத்தேர்வு பட்டியல் 16 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்களுக்கு 45 நிமிட நேரத்துக்குள் பயன்படுத்தப்படுகிறது[1]. இச்சோதனைக்காக என்றி அலெக்சாண்டர் முர்ரேயின் தேவைக் கோட்பாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட தேர்விற்கான பாடப்பொருளை எட்வர்ட் பயன்படுத்தினர். இச்சோதனை முறை அடிப்படையான 15 மனிதத் தேவைகள் மற்றும் ஊக்கிகளின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. எட்வர்ட் தனிநபர் விருப்பத்தேர்வு பட்டியல் தனிநபர் தேவை மற்றும் ஊக்கிகள் போன்றவற்றிற்கு பொருள் விளக்கமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது [2]. சோதிக்கப்படுபவருடன் அவருடைய துலங்கல்களைக் குறித்து மீளாய்வு செய்யும்போது ஆலோசனை வழங்க வேண்டிய சூழ்நிலையில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது [1].