எட்வர்ட் குட்சாத்
இந்திய பழங்குடி தலைவர்
எட்வர்ட் குட்சாத் (Edward Kutchat) என்பவர் இந்தியப் பழங்குடித் தலைவர்[1] மற்றும் கார் நிகோபார் தீவின் பழங்குடி குழுவின் தலைவராக இருந்தவர் ஆவார். கார் நிக்கோபார் தீவில் வானூர்தி நிலைய விரிவுபாட்டிற்காகத் தனது நிலத்தை இந்திய அரசாங்கத்திடம் வழங்கி ஒத்துழைத்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டு ஊடகங்களில் இடம்பெற்றார்.[2] ஜவகர்லால் நேரு இத்தீவிற்கு வந்த போது இவருக்கு தன்னுடைய கச்சுடையினை வழங்கி பெருமைப்படுத்தினார். இவர் நிக்கோபார் மக்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.[3] இந்திய அரசாங்கம் 1989-ல் இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[4]
எட்வர்ட் குட்சாத் Edward Kutchat | |
---|---|
பிறப்பு | அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தியா |
பணி | பழங்குடி தலைவர் |
விருதுகள் | பத்மசிறீ |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kingdom For a Jacket". Little India. 16 October 2011. Archived from the original on 4 October 2015. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
- ↑ "Nehru got land for his jacket". Andhra Telangana Vishesh. 5 September 2011. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
- ↑ "History of Jadwets". Jadwet Trading Company. 2015. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
மேலும் படிக்க
தொகு- Dr. Tilak Ranjan Bera (2010). A Journey Through Nicobars: A History of Nicobar Islands Pre and Post Tsunami (Nicobars, A History of Nicobar Islands Pre and Post Tsunami). Zen publication. p. 279. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190612142.