எட்வார்டு ஜெவிட் ராபின்சன்

எட்வர்ட் ஜெவிட் ராபின்சன் என்பவர் 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயரும் சீர்திருத்தத் திருச்சபை (புராட்டஸ்டன்ட்) மதபோதகரும் ஆவார். இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.

எட்வர்ட் ஜெவிட் ராபின்சன் எழுதிய "தமிள் விஸ்டம்" நூல், 1873[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ராபின்சன் 1873-இல் "தமிழ் விஸ்டம்" என்ற பெயரில் பண்டைய தமிழ் நூல்களின் தொகுப்பு ஒன்றைப் பதிப்பித்தார். இதில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளின் ஒரு பகுதியும் அடங்கும். 1885-இல் இதன் விரிவாக்கமாக "டேல்ஸ் அண்டு போயம்ஸ் ஆஃப் செளத் இந்தியா" என்ற பெயரில் வெளியிட்டார். இதில் வீரமாமுனிவர், சீகன்பால்க் மற்றும் பெர்சிவல் போன்ற மதபோதகர்களைப் பற்றியும் அவர்களது பணிகளைப் பற்றியும், நூலின் முன்னுரையில் தனக்கு முந்தைய மொழிபெயர்ப்பாளர்களான எல்லீசன், வில்லியம் ஹென்றி ட்ரூ, காரல் கிரவுல், சார்லஸ் எட்வர்ட் கோவர் ஆகியோரது மொழிபெயர்ப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.[2]

தனக்கு முந்தைய மதபோதகர்களைப் போலவே ராபின்சன்னும் திருக்குறளின் முதல் இரண்டு பால்களை மட்டுமே மொழிபெயர்த்தார். அவற்றின் 108 அதிகாரங்களையும் செய்யுள் நடையில் மொழிபெயர்த்த அவர், மூன்றாவது பாலை மொழிபெயர்க்கவில்லை. அவரது சமகாலத்து ஆங்கிலேயர்கள் அவரது செய்யுள் நடை மொழிபெயர்ப்பினை வெகுவாகப் பாராட்டினர். எனினும் தா. பெ. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பிற்கால இந்திய அறிஞர்கள் ராபின்சனின் மொழிபெயர்ப்பு மூலத்தோடு ஒன்றியிருக்கவில்லை என்றே கருதுகின்றனர்.[2]

ஜி. யு. போப், தனது குறள் மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையில் ராபின்சனை இவ்வாறு பாராட்டினார்:[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Edward Jewitt Robinson (1873). Tamil Wisdom; Traditions Concerning Hindu Sages, and Selections from their writings. London: Wesleyan Conference Office.
  2. 2.0 2.1 Manavalan, A. A. (2010). A Compendium of Tirukkural Translations in English (4 vols.). Chennai: Central Institute of Classical Tamil. p. xxi–xxii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-908000-2-0.
  3. Pope, George Uglow (1886). The Sacred Kurral of Tiruvalluva Nayanar (with Latin Translation By Fr. Costantino Giuseppe Beschi) (PDF). London: W H Allen & Co. p. iii.