எண்சுவடி என்பது தமிழ்க் கணிதக் கல்விக்கான வாய்ப்பாட்டு நூல். குப்பன் ஐயங்கார் என்பவரால் 1859 இல் சென்னையில் வெளியிடப்பட்ட எண்சுவடி 54 பக்கங்களைக் கொண்டிருந்தது. சிறுவர்களுக்கென சிறுவரெண்சுவடி எனும் நூல் 1863 இல் வெளியாகியது. எண்சுவடி நூல்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருமளவு அச்சிடப்பட்டன. "எண்சுவடியின் வடிவமைப்பும் உள்ளடக்கமும் திண்ணைப்பள்ளிக்கு உரித்தான மனக்கணக்கு முறையை சார்ந்தே இருந்துவந்த ஒன்று."[1]

இதன் கையெழுத்துப் பிரதியில் ஒன்றை யேர்மனிய சமயப்பரப்புரையாளர் யேர்மனிக்கு எடுத்துச் சென்றுள்ளார். 1856 ம் ஆண்டு அளவில் மமுபிள்ளையால் தொகுக்கப்பட்ட எண் சுவடியை அண்ணாமலை முதலியார் 1851 இல் வெளியிட்டார்.[2]

எண் சுவடிகள் எண்கள், அளவுகள், கால முறைகள் பற்றிய தொடக்க நிலை மாணவர்களுக்கான கணிதத் தகவல்களைக் கொண்டிருந்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. த. செந்தில்பாபு. (2008). அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். புது விசை. [1]
  2. "ANNOTATED BIBLIOGRAPHY FOR TAMIL STUDIES CONDUCTED BY GERMANS IN TAMILNADU DURING 18TH AND 19TH CENTURIES" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்சுவடி&oldid=3545692" இலிருந்து மீள்விக்கப்பட்டது