எண்ணிம மனிதவியல்
எண்ணிம மனிதவியல் (Digital Humanities) என்பது மனிதவியல், கணினியியல் துறைகள் இணைந்த ஒரு கல்விப் புலம் ஆகும். இத் துறை மரபுசார் சமூக அறிவியல் துறைகளை (சமூகவியல், மானுடவியல், தொல்பொருளியல், மொழியி9788414842யல், பண்பாட்டியல்) கணினியியல் கருவிகள், குறிப்பாக தகவல் அறிவியல் கருவிளைப் (தரவு காட்சிப்படுத்தல், தகவல் மீட்டெடுப்பு, தரவு அகழ்வு, புள்ளியியல்) பயன்படுத்தி அணுகும் முறைமை ஆகும். எண்ணிமச் சேகரிப்புகளை தொகுப்பதிலிருந்து, பெரும் பண்பாட்டுத் தரவுகளை அகழ்வது வரை என இத் துறையின் அக்கறைகள் விரிவானது.