எண்முறை மின்னணுவியல்
எண்முறை மின்னணுவியல் (digital electronics) அல்லது எண்முறை மின்னணு சுற்றுகள் (digital electronic circuits) என்பது தொடர் எண்ணுரு மதிப்புகளை வடிவாக்குதல் போலல்லாமல் ஒப்புமை மட்டங்களின் தனித்த பட்டைகளால் குறிகைகளை வடிவாக்குதல் ஆகும்.
பெருமபாலான சமயங்களில், இது இரண்டு தனித்த மட்டங்களை கொண்டுள்ளது. மேலும் அவை இரண்டு மின்னழுத்த பட்டைகளால் வடிவாக்கம் செய்யப்படுகிறது. எண்முறை கட்டகங்கள் எண்முறை வடிவாக்கத்தில் உள்ள வெவ்வேறு புறநிலை மதிப்புகளைச் செயலாக்கம் செய்கிற கருவிகள் கொண்டவையாகும்.[1] எண்முறை தொழினுட்பங்கள் மற்றும் கட்டகங்கள் வடிவமைக்க மிகவும் எளிதானதாக இருக்கின்றன. இது உயர் துல்லியமும், நிரலாக்கத்தன்மையும், இரைச்சல் எதிர்ப்புத்தன்மையும், எளிதான தரவு சேமிப்பும், தொகுப்புச் சுற்று வடிவாக புனைய எளிதாகவும் அமைந்துள்ளன. இது மிகச் சிறிய வடிவில் மிக கடினமான செயல்களை செய்யக்கூடிய கருவிகளை தயாரிக்க வழிவகை செய்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ எண்முறை மின்னணுவியல், விக்கிநூல், எண்தளமூறை, துணைத்தலைப்பு:ஒப்புமையும், எண்முறையும்.