அல்பெயர் எண்

(எண் - அல்பெயர் எண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எண்ணிக்கை அளவைக் குறிப்பிடுவது எண். அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களும் தமிழில் இருந்தன. அவற்றைத் தொல்காப்பியர் 'அல்பெயர் எண்' என்று குறிப்பிடுகிறார்.
ஐ அம் பல் என வரும் இறுதி - எனபது அவர் நூற்பா (393)

எண் தொகு

நாம் 'ஏழு' என்று வழங்கும் எண் தொல்காப்பியர் காலத்தில் 'ஏழ்' என்று வழங்கப்பட்டது. 'ஏழ்' என்னும் சொல்லை அவர் புள்ளி மயங்கியலில் வைத்துப் புணர்ச்சிவிதி கூறுகிறார்.
ஏழன் உருபு (=ஏழாம் வேற்றுமை உருபு)-(388)
எழு கழஞ்சு (389)
எழுபஃது (390)
ஏழாயிரம் (391)
ஏழ் நூறாயிரம் (392)
ஏழ் தாமரை, ஏழாம்பல், ஏழ் வெள்ளம் (393)
ஏழகல் (394)
இப்படி ஏழ் எண்ணுக்கு 7 நூற்பாக்கள் வருகின்றன.

அல்பெயர் எண் தொகு

'ஐ'யில் முடியும் தாமரை, 'அம்'மில் முடியும் வெள்ளம், 'அல்'லில் முடியும் ஆம்பல் ஆகிய எண்ணுப்பெயர்கள் அளவிட முடியாத பேரெண்களைக் குறிப்பவை என்பது தொல்காப்பியம் தரும் விளக்கம்.[1]

விளக்கம் தொகு

இதனைப் பத்தின் அடுக்காக எண்ணிப் பார்ப்பதும் முறையானதாகப் படுகிறது.
ஒன்று = 1
பத்து = 10
நூறு = 102
ஆயிரம் = 103
பத்தாயிரம் = 104
நூறாயிரம் = 105
பத்து நூறாயிரம் = 106
கோடி = 107
தாமரை (=கோடிகோடி) = 1014
வெள்ளம் (=கோடிதாமரை) = 1021ஆம்பல் (=கோடிவெள்ளம்) = 1028

பரிபாடலில் அல்பெயர் எண் (=செய்குறி ஈட்டம்) தொகு

இந்த எண்களைக் கீரந்தையார் பாடல் (பரிபாடல் 2) செய்குறி ஈட்டம் என்று குறிப்பிடுகிறது. இந்தப் பாடலில் கால ஊழியின் தொன்முறை விளக்கம் காட்டப்படுகிறது.

  1. தொன்முறை இயற்கையின் பசும்பொன் உலகும், மண்ணும் பாழ்பட எழுந்த விசும்பின் ஊழி
  2. கரு வளர்ந்த வானத்தில் உருவம் அறியப்படாத ஒன்றன் ஊழி
  3. உந்துவளி கிளர்ந்த ஊழி
  4. செந்தீச் சுடரிய ஊழி
  5. பனியொடு தண்பெயல் தலைஇய ஊழி
  6. மூழ்கிய வெள்ளத்தில் நிலம் மீண்டும் பீடுயர்பு தோன்றிய ஊழி

இந்த ஊழிக் காலங்கள் தோன்றுகையில் எந்த அளவு இடைவெளிக் காலம் நீண்டது என்பதற்கு அல்பெயர் அளவை எண்களும் அவற்றிற்குத் தரப்பட்டுள்ளன.

வரிசை எண் ஊழி ஊழி தோன்றுவதற்கு எடுத்துக்கொண்ட காலம். (செய்குறி ஈட்ட அளவையில்)
1 பாழ்பட்டு விசும்பு எழுந்த ஊழி நெய்தல் அளவு காலம்
2 விசும்பில் கரு வளந்த ஊழி குவளை அளவு காலம்
3 வளி ஊழி ஆம்பல் அளவு காலம்
4 தீ ஊழி சங்கம் அளவு காலம்
5 பனிமழை ஊழி கமலம் அளவு காலம்
6 நிலம் தோன்றிய ஊழி வெள்ளம் அளவு காலம்

மேலும் காண்க தொகு

மேற்கோள் தொகு

  1. தொல்காப்பியம் - புள்ளி மயங்கியல் - ஐ அம் பல் என வரூஉம் இறுதி அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும். நூற்பா 98
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பெயர்_எண்&oldid=2743666" இலிருந்து மீள்விக்கப்பட்டது