எதிரொலியற்ற அறை

எதிரொளியற்ற அறை (Anechoic chamber) என்பது மின் உணர்கொம்புகளின் (antenna) பண்புகளையும் பற்றி அறிவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஆராய்ச்சி கூடம் ஆகும்.[1] இந்த அறை மின்காந்த அலைகளை எதிரோளிகாவண்ணம் வடிவமைக்கப்படுகிறது. மின் உணர்கொம்புகளைச் சோதனைக்கு உட்படுத்தும் பொழுது வேறு எந்த மின்காந்த அலைகளும் இடையுறாவண்ணமும், மின்காந்த அலைகள் எதிரோளிகாவண்ணமும் சோதனைச்சாலை இருக்க வேண்டும். இதற்காக இவ்வறையில் மின்காந்த அலைகளை உட்கவரும் பொருள்கள் கொண்டு பிரமிட் போன்ற வடிவமைப்பு சுற்றுப்புற சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக மின்காந்த அலைகள் எதிரொளிப்பு குறைகின்றது. இந்த மின்காந்த அலைகளை உட்கவரும் பொருள்கள் பிரமிட் வடிவம் மட்டுமன்றி கும்பு வடிவத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த அறை சுமார் சில மீட்டர்கள் முதல் பத்து அல்லது இருபது மீட்டர் வரை அளவு கொண்டவையாக இருக்கும். இந்த அறை மின் உணர்கொம்புகளின் பண்புகள் மற்றும் ரேடர் குறுக்கு தோற்றம் (RCS) பற்றி அறிவதற்கு உதவுகிறது.

எதிரொலியற்ற அறை.
மின்காந்த அலைகளை உட்கவரும் பிரமிட் அமைப்பு.

மேற்கோள்கள்தொகு

  1. David K. Barton & Sergey A. Leonov. Radar Technology Encyclopedia, ARTECH HOUSE, INC., Boston·.London, 1998, Page No. 22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிரொலியற்ற_அறை&oldid=2466745" இருந்து மீள்விக்கப்பட்டது