எதிர்ச்சூறாவளி
எதிர்ச்சூறாவளி
தொகுசுற்றுப்புறத்தைக் காட்டிலும் அதிகமான அழுத்தமுள்ள ஓர் இடத்தில் ஏற்படும் வாயு மண்டலச்சுழல் 30 அட்ச ரேகையில் இரு அர்த்த கோளங்களிலும் சமுத்திரங்களில் நிரந்தரமாக உள்ள எதிர்ச்சூறாவளிகள் பெயர் பெற்றவை. இவை பல நூறு முதல் பல்லாயிரக்கணக்கான மைல்கள் அளவில் உள்ளன. எல்லா அட்சரேகைகளுக்கும் கால நிலையைக் கண்டறிய, இவற்றின் நிலையும் பலமும் மிகவும் முக்கியமான அம்சங்கள், சூறாவளியைப் போலன்றி, வடக்கு அர்த்த கோளத்தில் வலஞ்சுழியாகவும், தென் அர்த்த கோளத்தில் இடஞ்சுழியாகவும் இவை சுழல்கின்றன. பலத்த காற்றும் கெட்ட காலநிலையும் சூறாவளியின் அறிகுறிகள்.
ஆனால், இவற்றிற்கு எதிராக எதிர்ச்சூறாவளியின் அறிகுறிகள் இனிய காலநிலையும் மென்மையான காற்றும் ஆகும். இவ்வாறு சூறாவளியின் தன்மைக்கு எதிர்மாறாக இருப்பதனால் எதிர்ச்சூறாவளி என்ற பெயரைக் கி. பி. 1861-ல் சர் பிரான்சிஸ் கால்ட்டன் என்பவர் புதிதாக வழங்கினர். குளிர்காலத்தில் வட அமெரிக்காவிலும் யூரேஷியாவிலும் எதிர்ச்சூறாவளி உண்டாகிறது.