எதிர்ப் பொருள்
எதிர்ப்பொருள் (anti-matter) என்பது இப்பேரண்டத்தில் (பிரபஞ்சத்தில்) எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாகும். இது பொருளுக்கு இணையானதும் நேர்எதிரானதும் ஆகும். பொருளும் எதிர்ப்பொருளும் சேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்துப் (annihilation) பேராற்றல் வெளிப்படும்.[1][2][3]
உதாரணம்
தொகுஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் ஒரு எதிர்த்துகள் உண்டு. எ.கா: எலக்ட்ரானின் எதிர்த்துகள் பாசிட்ரான் ஆகும். இவை இரண்டும் ஒரே நிறை உடையவை. ஆனால் எலக்ட்ரான் (எதிர்மின்னி) எதிர்மறை மின்சுமையும் பாசிட்ரான் நேர்மறை மின்சுமையும் பெற்றுள்ளன.
கற்பனைக்கதைகளில்
தொகுபெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைக்கதைகளில் எதிர்ப்பொருளைப் பயன்படுத்தி உள்ளனர். டான் பிரௌன் எழுதிய ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் நாவலில் எதிர்ப்பொருள் உலகை அழிக்கவல்ல ஆயுதமாய் சித்தரிக்கப்படுகிறது.
பெருவெடிப்பு
தொகுபிரபஞ்சத் துவக்கம் சமஅளவு பொருளும் சமஅளவு எதிர்ப்பொருளும் சேர்ந்து ஒன்றையொன்று அழித்துக் கொண்டதால் உண்டான பெருவெடிப்பினாலேயே என்று நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ten things you might not know about antimatter". symmetry magazine இம் மூலத்தில் இருந்து 8 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181108224807/https://www.symmetrymagazine.org/article/april-2015/ten-things-you-might-not-know-about-antimatter.
- ↑ "Smidgen of Antimatter Surrounds Earth". 11 August 2011. Archived from the original on 26 September 2011.
- ↑ Agakishiev, H. (2011). "Observation of the antimatter helium-4 nucleus". நேச்சர் (இதழ்) 473 (7347): 353–356. doi:10.1038/nature10079. பப்மெட்:21516103. Bibcode: 2011Natur.473..353S.