எதிர்ம நேர்ம உரிமைகள்
எதிர்ம நேர்ம உரிமைகள் என்பது உரிமைகளை விவரிக்க மெய்யியலாளர்களும் அரசியல் அறிவியலாளர்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு கருத்துரு ஆகும். இந்தப் பார்வையின் படி எதிர்ம உரிமைகள் என்பன பிறர் தலையீடு செய்யாமல், செயல் இல்லாமல் நிலைநாட்டப்படுவன. எ.கா ஒருவர் கொல்லப்படாமல் அல்லது தாக்கப்படாமல் இருத்தல் என்பது ஒரு எதிர்ம உரிமை ஆகும். நேர்ம உரிமைகள் என்பன செயல் ஊடாக நிலைநாட்டப்படுவன. இவை நல உரிமைகள் (Welfare Rights) என்றும் அறியப்படுகின்றன.[1] எ.கா அரசிடம் இருந்து கல்வி பெறுவதற்கான உரிமை ஒரு நேர்ம உரிமை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Johnna Fisher (தொகுப்பு). (2009). Biomedical Ethics: A Canadian Focus.