எதிர்முழக்கம்

(எதிர் முழக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எதிர்முழக்கம் (reverberation) என்பது ஒலியானது ஓர் அறையின் சுவர், கூரை முதலியவற்றில் மோதி திரும்பத் திரும்ப எதிரொலிப்பதால், ஒலித் தோற்றுவாயிலிருந்து ஒலி அடங்கிய பின்பும், ஒலி சிறிது நேரம் நிலைத்திருப்பது.[1][2][3]

எதிர்முழக்க நேரம்

தொகு

எதிர்முழக்க நேரம் (reverberation time) RT60 அல்லது Tr என்பது ஒலித்தோற்றுவாய் ஒலி எழுப்புவதை நிறுத்திய பின், ஒலிச்செறிவு 60 dB (டெசிபெல்) அளவு குறைய அல்லது அவ்வொலியின் முதல் செறிவிலிருந்து பத்து லட்சம் அளவு செறிவு குறையத் தேவைப்படும் காலஅளவு ஆகும். எதிர்முழக்க நேரத்தைக் கணக்கிடுவதற்குப் பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் முதலாவதும், பரவலாகவும் பயன்படுத்தப்படுவது சேபைன் சமன்பாடு ஆகும். வாலசு சேபைன் என்பவர் இதனை முதன் முதலில் பயன்படுத்தினார்.

சேபைன் சமன்பாடு

தொகு

சேபைன் சமன்பாடு அல்லது சேபைன் தொடர்பு (Sabine equation) சிறந்த அரங்க வடிவமைப்பிற்கு உதவும் ஒரு தொடர்பினைக் காட்டுகிறது.  ,  ,   என்கிற பக்கங்களைக் கொண்டதும் இப்பக்கங்களின் ஒலி ஏற்புக் குணகம்  ,  ,   என்றும் உள்ள ஓர் அரங்கின் எதிர் முழக்க நேரம்,

 .

என்ற சமன்பாட்டால் கொடுக்கப்படுகிறது. இச்சமன்பாட்டை பயன்படுத்த நீளங்கள் அடியில் அளவிடப்பட வேண்டும். மாறாக மீட்டரில் அளவிடப்பட்டால் இச்சமன்பாடு,

 .

இங்கு  , என்பது அறையின் செயலுறு மேற்பரப்பு (effective surface area). இது ஒரு குறிப்பிட்ட பொருளால் அடக்கப்படும் மேற்பரப்பு, அப்பொருளின் உள்ளீர்ப்புக் குணகத்தினதும் பெருக்கல்களின் கூட்டுத்தொகை ஆகும். ஒலி ஏற்பு   என்பது சேபைன் என்ற அலகால் தரப்படும்.

எதிர்முழக்க நேரம் ( , செக்கன்களில்) அறையின் கனவளவிற்கு ( , கனமீட்டர்) நேர்விகித சமனாகவும், அறையின் செயலுறு மேற்பரப்பளவிற்கு ( , சதுரமீட்டர்) நேர்மாறு விகித சமனாகவும் இருக்கும்.

ஒலி ஏற்புக் குணகம்   அதிர்வெண்ணுடன் வேறுபடுவதால், எதிர்முழக்க நேரமும் அதிர்வெண்ணுடன் மாறுபடும். எதிர்முழக்க நேரம் ஒரு நல்ல அரங்கிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Valente, Michael; Holly Hosford-Dunn; Ross J. Roeser (2008). Audiology. Thieme. pp. 425–426. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58890-520-8.
  2. Lloyd, Llewelyn Southworth (1970). Music and Sound. Ayer Publishing. pp. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8369-5188-2.
  3. Roth, Leland M. (2007). Understanding Architecture. Westview Press. pp. 104–105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8133-9045-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்முழக்கம்&oldid=3794230" இலிருந்து மீள்விக்கப்பட்டது