எத்தில் அசிட்டோ அசிட்டேட்டு
எத்தில் அசிட்டோ அசிட்டேட்டு (Ethyl acetoacetate) என்பது C6H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டோ அசிட்டிக் அமிலத்தினுடைய எத்தில் எசுத்தர் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. இது ஒரு நிறமற்ற திரவமாகும். பல்வேறு வகையான சேர்மங்களின் உற்பத்தியில் ஒரு வேதியியல் இடைநிலையாக பரவலாகப் எத்தில் அசிட்டோ அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
தொகுஇருகீட்டீனுடன் எத்தனாலைச் சேர்த்து வினை புரியச் செய்து பெரிய அளவில், எத்தில் அசிட்டோ அசிடேட்டு தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.[1]
எத்தில் அசிட்டோ அசிடேட்டின் சிறிய அளவிலான தயாரிப்பு ஒரு பாரம்பரிய ஆய்வகச் செயல்முறையாகும்.[2] கிளெய்சன் ஒடுக்க வினை மூலம் எத்தில் அசிட்டேட்டை ஒடுக்கும் செயல்முறையை இம்முறை உள்ளடக்கியுள்ளது. எத்தில் அசிடேட்டின் இரண்டு மோல்கள் ஒடுங்கி எத்தில் அசிட்டோ அசிடேட்டு மற்றும் எத்தனால் ஒவ்வொன்றும் ஒரு மோலை உருவாக்குகின்றன.[3]
வினைகள்
தொகுஎத்தில் அசிட்டோ அசிடேட்டு கீட்டோ-ஈனால் அமைப்புமாற்றியத்திற்கு உட்பட்டது. 33 °செல்சியசு வெப்பநிலையில் சுத்தமான திரவத்தில், ஈனால் மொத்தத்தில் 15% இருக்கும்.[4]
ஈனால் மிதமான அமிலத்தன்மை கொண்டதாகும். இதனால் எத்தில் அசிட்டோ அசிட்டேட்டு அசிட்டைலசிட்டோன் போலவே செயல்படுகிறது::[5]
- CH3C(O)CH2CO2C2H5 + NaH → CH3C(O)CHNaCO2C2H5 + H2
இதன் விளைவாக வரும் கார்பன் எதிர் மின்னயனி அணுக்கரு நாட்ட பதிலீட்டு வினைக்கு உட்படுகிறது. எத்தில் அசிட்டோ அசிட்டேட்டு பெரும்பாலும் அசிட்டோ அசிட்டிக் எசுத்தர் தொகுப்பில் பயன்படுத்தப்படுகிறது. இது மலோனிக் எசுத்தர் தொகுப்பு அல்லது கினோயிவெனசெல் ஒடுக்கத்தில் உள்ள ஈரெத்தில் மலோனேட்டுடன் ஒப்பிடப்படுகிறது. இதன் ஆல்க்கைலேற்றம் மற்றும் சவர்க்காரமாக்கலுக்குப் பிறகு, வெப்பவியல் கார்பாக்சில் நீக்கமும் சாத்தியமாகும்..[6]
மின்னணு கவரி முனைவு கார்பனுடன் சேர்ந்திருத்தலை தவிர எத்தில் அசிட்டோ அசிட்டேட்டின் ஈரெதிர்மின் அயனி ஒரு பயனுள்ள கட்டுமானத் தொகுதியாக பயன்படும். இவ்வினையை பின்வரும் எளிமையான வடிவத்தில் காட்டலாம்: :[5]
- CH3C(O)CHNaCO2C2H5 + BuLi → LiCH2C(O)CHNaCO2C2H5 + BuH}} (Bu = butyl)
எத்தில் அசிட்டோ அசிடேட்டின் குறைப்பு வினை எத்தில் 3-ஐதராக்சிபியூட்ரேட்டை அளிக்கிறது.[7]
அசிட்டைல்கீட்டீனை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையின் மூலம் எத்தில் அசிட்டோ அசிடேட்டு மாற்று எசுத்தராக்கல் வினையின் மூலம் பென்சைல் அசிட்டோ அசிட்டேட்டைக் கொடுக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Riemenschneider, Wilhelm; Bolt, Hermann M. (2005). "Esters, Organic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a09_565.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.
- ↑ J. K. H. Inglis and K. C. Roberts (1926). "Ethyl Acetoacetate". Organic Syntheses 6: 36. doi:10.15227/orgsyn.006.0036.
- ↑ Tan, Da-Zhi; Li, Ming-Ze; Xiong, Wan-nan; Xu, Yi-Xuan; Pan, Yang; Fan, Wen-Jie; Jiang, Wen-Feng (2023). "Improvement of the Ethyl Acetoacetate Preparation Experiment: A Green Chemistry Experiment". Journal of Chemical Education 100 (2): 811–814. doi:10.1021/acs.jchemed.2c00718. Bibcode: 2023JChEd.100..811T.
- ↑ Jane L. Burdett; Max T. Rogers (1964). "Keto-Enol Tautomerism in β-Dicarbonyls Studied by Nuclear Magnetic Resonance Spectroscopy. I. Proton Chemical Shifts and Equilibrium Constants of Pure Compounds". J. Am. Chem. Soc. 86: 2105–2109. doi:10.1021/ja01065a003.
- ↑ 5.0 5.1 Jin, Yinghua; Roberts, Frank G.; Coates, Robert M. (2007). "Stereoselective Isoprenoid Chain Extension with Acetoacetate Dianion: [(E, E, E)-Geranylgeraniol from (E, E)-Farnesol". Organic Syntheses 84: 43. doi:10.15227/orgsyn.084.0043.
- ↑ Carey, Francis A. (2006). Organic Chemistry (Sixth ed.). New York, NY: McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-111562-5.
- ↑ Adkins, Homer; Connor, Ralph; Cramer, Howard (1930). "The Hydrogenation of Acetoacetic Ester and Certain of Its Derivatives over Nickel". Journal of the American Chemical Society 52 (12): 5192–5198. doi:10.1021/ja01375a082.