எத்தில் குழு
எத்தில் குழு (Ethyl group) என்பது ஈத்தேனிலிருந்து (C2H6) தருவிக்கப்பட்ட ஓர் ஆல்கைல் பதிலி ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு –CH2CH3 ஆகும். பெரும்பாலும் இதை Et என்று சுருக்கி அழைப்பார்கள். கரிம வேதியியல் ஐயுபிஏசி பெயரிடும் முறையில் எத்தில் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மூலக்கூறில் இடம்பெற்றுள்ள நிறைவுற்ற இரண்டு கார்பன் பகுதிக்கூறுகளைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் ’எத்’ என்ற முன்னொட்டானது மூலக்கூறிலுள்ள இரண்டு கார்பன் அணுக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
எத்திலேற்றம்
தொகுஒரு சேர்மம் உருவாகும்போது அத்துடன் எத்தில் குழுவைச் சேர்க்கின்ற வினை எத்திலேற்ற வினை எனப்படும். அச்செயல் முறை எத்திலேற்றம் எனப்படும். பென்சீனுடன் எத்தில் குழுவைச் சேர்க்கும் வினையே பரவலாக எத்திலேற்ற வினைக்கு உதாரணமாகக் கூறப்படுகிறது. இவ்வினையில் எத்திலீன் எத்திலேற்ற முகவராகச் செயல்படுகிறது.
தோராயமாக 1999 ஆம் ஆண்டு மட்டும் 24.7 மில்லியன் டன்கள் எத்தில் பென்சீன் தயாரிக்கப்பட்டது[1]. சிடைரீன் தயாரிப்புக்கு முன்னோடி சேர்மமாக இது பயன்படுகிறது. சிடைரீனிலிருந்து பாலிசிடைரீன் தயாரிக்கப்படுகிறது. எத்தில் குழுவைக் கொண்டுள்ள பல சேர்மங்கள் மின்னணு கவர் எத்திலேற்ற வினையினால் உருவாக்கப்படுகின்றன. அதாவது அணுக்கருவில் எத்தில் குழுவை ஆதாரமூலமாகக் கொண்ட சேர்மங்கள் சூடுபடுத்தப்பட்டு இவை தயாரிக்கப்ப்டுகின்றன. டிரையெத்திலாக்சோனியம் டெட்ராபுளோரோபோரேட்டு [Et3O]BF4 இத்தகையதொரு முகவராகும். நல்ல அணுக்கருகவரிகள் தேவையெனில் எத்தில் ஆலைடுகள் போன்ற குறைவான எலக்ட்ரான்கவர் வினைப்பொருள்கள் பயன்படுத்த வேண்டும்.
முப்பரிமானவேதியியல்
தொகுசமச்சீரற்று எத்தினேற்றமடைந்த கலவைகளில் உள்ள மெத்திலீன் புரோட்டான்கள் மாறு தோற்றுரு இணைகளாக உள்ளன. அத்தகைய பதிலீடுகளை மாற்றக்கூடிய முப்பரிமான தேர்திறன் நாற்தொகுதி வினைப்பொருள்கள் அறியப்படுகின்றன.
பெயர்க்காரணம்
தொகுஇந்த குழுவின் பெயரானது ஏதெர் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும், கிரேக்கர்களின் முதல் காலகட்ட காற்றுக் கடவுள் ஏதெர் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் எளிதில் ஆவியாகக் கூடிய எந்தவொரு சேர்மமும் இப்பெயரால் அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பின்னொட்டாக விளங்கும் ’இல்’ என்பது பொருள் என்றும் கருதப்பட்டு சேர்க்கப்பட்டது. 1835 ஆம் ஆண்டில் சுவீடிய வேதியலாளர் யான் யோக்கோபு பெர்சிலியசு எத்தில் என்ற சொல்லை உருவாக்கினார்[2].
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Vincent A. Welch, Kevin J. Fallon, Heinz-Peter Gelbke "Ethylbenzene" Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a10_035.pub2
- ↑ In 1834, the German chemist Justus Liebig had argued that the group C2H5 constituted a "radical" (a cluster of atoms that did not undergo changes during chemical reactions). (See: Justus Liebig (1834) "Ueber die Constitution des Aethers und seiner Verbindungen" (On the composition of ethers and their compounds), Annalen der Pharmacie, 9 : 1–39.) In reporting on Liebig's findings (and related work by others), Berzelius coined the names "methyl" and "ethyl" for the "radicals" CH3 and C2H5, respectively. From Jacob Berzelius, Årsberättelsen om framsteg i fysik och kemi [Annual report on progress in physics and chemistry] (Stockholm, Sweden: P.A. Norstedt & Söner, 1835), p. 376: "Man får då ge namn åt etherradikalerna; man kan kalla den äldre C4H10, ethyl, den nyare C2H6, methyl, … " (One may then give names to ether radicals; one can call the older [one] C4H10, ethyl, the newer [one] C2H6, methyl, … [Note: At that time, chemists used the wrong atomic masses (e.g., 6 for carbon instead of 12); hence the coefficients shown here must be divided by two.]) In his translation into German of Berzelius' report, the German chemist Friedrich Wöhler transliterated "ethyl" as "Aethyl". (See: Jöns Jacob Berzelius with Friedrich Wöhler, trans., Jahresbericht über die Fortschritte der physischen Wissenschaften (Annual report on the progress of the physical sciences), 15 : 381.)