எனது பயணம் (நூல்)

எனது பயணம் சுவாமி விவேகானந்தரின் பயண நூல். விவேகானந்தரின் நகைச்சுவை உணர்வுக்கும், வரலாற்று உண்மைகளை நகைச்சுவையாகவே தரும் திறமைக்கும் ஒரு சான்று நூல். சுவாமி விவேகானந்தரின் நூல்களுள் இது வித்தியாசமான ஒன்று. இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டது.[1]

எனது பயணம்
நூலாசிரியர்சுவாமி விவேகானந்தர்
மொழிபெயர்ப்பாளர்சி. கனகராஜன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைபயண நூல்
வெளியீட்டாளர்இராமகிருஷ்ண மடம், சென்னை
வெளியிடப்பட்ட நாள்
1996
பக்கங்கள்174
ISBN9788171207619

இந்த நூல் ’உத்போதன்’ என்ற வங்காளப் பத்திரிக்கைக்காக அவர் தமது பயண அனுபவங்களை வங்க மொழியில் எழுதியதின் தமிழாக்கம். அப்போது அந்த பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர் சுவாமி திரிகுணாதீதானந்தர். அவருக்கு இதை ஒரு கடித நடையில் எழுதியுள்ளார் சுவாமி விவேகானந்தர். தமிழில் முதலில் இந்நூல் 1986 ஆம் ஆண்டு வெளிவந்தது. இரு மறுபதிப்புகளுக்கு பின்னர், இரண்டாம் பதிப்பு, குறிப்புகளுடன் 1996 இல் வெளிவந்தது.

முதல் அத்தியாயம் தொகு

சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறை மேலைநாடுகளுக்கு 1899 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் நீராவிக் கப்பல் கோல்கொண்டாவில் கல்கத்தாவிலிருந்து கிளம்பினார். பிரயாணத்தில் அவரது சக பிரயாணிகள் சுவாமி துரியானந்தரும், சகோதரி நிவேதிதையும். வரலாற்றை படிப்போருக்கு ஆர்வம் ஏற்படும் விதத்தில் கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். இதில் கப்பல் பிரயாணிகள் சேர்ந்து ஒரு சுறாமீனைப் பிடிக்கும் நிகழ்வை விவரிக்கும் இடத்தில், அந்த இடத்திற்கே படிப்போரை அழைத்துச் சென்றுவிடுகிறார்.

இரண்டாம் அத்தியாயம் தொகு

1900 ஆம் ஆண்டின் இறுதி0pயில் மேலைநாட்டிலிருந்து திரும்பிவரும் வழியிலான பயண விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதில் சக பிரயாணிகள் பிரபல பாடகி கால்வே, பிரபல எழுத்தாளர் ஜூல் போவா மற்றும் ஃபாதர் லாய்சன் ஆகியோர்.

இதில் சுவாமி விவேகானந்தரது நாடுகளைப் பற்றிய தீர்க்க தரிசனங்களும் அடங்கியுள்ளன: "செர்பியா,பல்கேரியா போன்றவை துருக்கி மாவட்டங்கள். ரஷ்ய-துருக்கிப் போருக்குப் பின் பேரளவிற்குச் சுதந்திரம் அடைந்துள்ளன...பெருமளவுக்கு ரத்தம் சிந்தி, பல ஆண்டுகள் போராடி அவர்கள் துருக்கியிடமிருந்து விடுதலை அடைந்தனர். ஆனால் கூடவே ஒரு சங்கடமான பிரச்சினையும் எழுந்துள்ளது. ஐரோப்பிய முறையில் அவர்கள் தங்களுக்கென ராணுவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஒருநாள் கூட அவர்களால் பாதுகாப்பாக இருக்க முடியாது. இன்றோ நாளையோ அவர்கள் ரஷ்யாவினால் அடிமை கொள்ளப்படுவது உறுதி..." after this its over

பிற்சேர்க்கை தொகு

அவர் எழுதி வைத்திருந்த கான்ஸ்டான்டி நோபிள், ஏதன்ஸூம் கிரீஸூம், லூவரி மியூசியம் பற்றிய குறிப்புகள் இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ளன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எனது_பயணம்_(நூல்)&oldid=3236073" இலிருந்து மீள்விக்கப்பட்டது