என்டோஸ் போர்
உறைசிதல் (endospore) அல்லது அகச்சிதல் என்பது உறைநிலையடைந்த, வலிவான இனப்பெருக்கம் சாலா கட்டமைப்பாகும். இது பேசில்லோட்டா தொகுதியில் அமையும் சில குச்சுயிரிகளால் தோற்றுவிக்கப்படுகிறது.[1][2] "உறைசிதல்" எனும் பெயர் சிதல் அல்லது விதையொத்த வடிவத்தைக் குறித்தாலும் (endo என்றால் 'உள்'), இது உண்மையில் ஒரு சிதல் அன்று (அதாவது, வழித்தோன்றல் அன்று). இது பிளவுற்றுப் பிரிந்த உறைநிலை( உறக்கநிலை) வடிவமாகும். இந்நிலைக்குக் குச்சுயிரி தன்னைக் குறுக்கிக் கொள்கிறது. உறைசிதல் உருவாக்கம் ஊட்டச்சத்து இன்மையால் கிளர்வுறுகிறது. வழக்கமாக, இது கிராம் நேரியல் குச்சுயிரியில் தோன்றுகிறது. உறைசிதல் உருவாக்கத்தில் குச்சுயிரி தன் கலச்சுவரை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒன்று மற்றொன்றுள் உறைந்துவிடுகிறது.[3] உறைசிதல் குச்சுயிரி நீண்ட காலம் வாழ, நூற்றாண்டுகள் கூட உறைந்த நிலையில் வாழவைக்கிறது.
உறைசிதல் குச்சுயிரி மரபனையும் (டி.என்.ஏ.) விலாவகத்தையும் (ஆர்.என்.ஏ.) பேரளவுக்கு டிபிகோலினிக் அமிலத்தையும் பெற்றுள்ளது. இந்த அமிலம் சிதல்சிறப்பு வேதிமம் ஆகும். இது உறைசிதலுக்கு உறைநிலையில் வாடும் திறத்தினை அளிக்கிறது. உறைசிதலின் உலர் எடையில் இது 10% அளவுக்கு உள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Murray, Patrick R.; Ellen Jo Baron (2003). Manual of Clinical Microbiology. Vol. 1. Washington, D.C.: ASM.
- ↑ C. Michael Hogan (2010). "Bacteria". Encyclopedia of Earth. Washington DC: National Council for Science and the Environment.
- ↑ 3.0 3.1 "Bacterial Endospores". Cornell University College of Agriculture and Life Sciences, Department of Microbiology. Archived from the original on June 15, 2018. பார்க்கப்பட்ட நாள் October 21, 2018.