என்றி கிளே ஒயிட்

விவசாய வேதியியலாளர்

என்றி கிளே ஒயிட் (Henry Clay White) ஓர் அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவர் வாழ்ந்தகாலம் 1848 முதல் 1927 வரையுள்ள காலமாகும். விவசாய அறிவியல் மற்றும் உயர் கல்வி துறைகளில் இவர் ஈடுபட்ட பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். [1] டார்வினின் பரிணாமக் கோட்பாட்டின் ஆரம்பகால ஆதரவாளராகவும் ஒயிட் இருந்தார். [2]

1872 ஆம் ஆண்டு முதல் 1927 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவிலுள்ள சியார்ச்சியா பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக ஒயிட் பணிபுரிந்தார். 1983 ஆம் ஆண்டு இராயல் வேதியியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் சியார்ச்சியா மாநிலத்திலுள்ள ஏதென்சு மாகாணத்தில் ஒயிட் இறந்தார். [1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 Stephens, Lester D. (August 28, 2013). "Henry Clay White (1848-1927)"..  
  2. Stephens, Lester D. (1994). "Henry Clay White, Darwin's Disciple in Georgia, 1875-1927". Georgia Historical Quarterly 78: 66–91. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_கிளே_ஒயிட்&oldid=2963231" இருந்து மீள்விக்கப்பட்டது