என் குருநாதர் பாரதியார் (புத்தகம்)

Kanagalingam.JPG

என் குருநாதர் பாரதியார் என்பது புதுவை ரா. கனகலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட பாரதியின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூலாகும். கனகலிங்கம் இளைஞராய் இருந்த போது பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதி திராவிடர் ஆவார். இந் நூலுள் தான் பாரதியாராடு பழகிய காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், பாரதியின் கவிதைகள் எழுந்த சூழல் ஆகியவற்றை எளிய நடையில் விளக்கி உள்ளார்.