என் மனைவியும் என் மாமியாரும்

"என் மனைவியும் என் மாமியாரும்" (My Wife and My Mother-in-Law) என்பது, இரட்டைப் பொருள் காட்டும் ஒளியியல் தோற்றமயக்கம் ஆகும். இதில் ஒரு இளம் பெண்ணை அல்லது ஒரு வயதான பெண்ணைப் பார்க்க முடியும். இளம்பெண் உருவத்தை மனைவியாகவும் வயதான பெண்ணின் உருவத்தை மாமியாராகவும் ஓவியர் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் இளம்பெண் உருவத்தின் தலையும் தோள்களும் காடப்பட்டுள்ளன. இவ்வுருவம் வலப் பக்கமாகத் திரும்பி பார்ப்பவருக்கு எதிர்ப்பக்கம் பார்த்துக்கொண்டிருக்கிறது. வயதான பெண்ணுக்கும் தலையும் தோளுமே தெரிகிறது. ஆனால், முகம் நேரே இடப்பக்கம் பார்க்கும்படி அமைந்துள்ளது.

வரலாறு

தொகு
 
"என் மனைவியும் என் மாமியாரும்", 1915
 
1888 செருமன் அஞ்சலட்டை

பிரித்தானியக் கேலிச்சித்திர ஓவியரான வில்லியம் எலி ஹில் (1887-1962) என்பவர், "பக்" (Puck) என்னும் நகைச்சுவைச் சஞ்சிகையின் 1915 நவம்பர் 6 இதழில் வெளியிட்டார். இதற்கு "அவர்கள் இருவரும் இந்தப் படத்தில் உள்ளனர் - கண்டுபிடியுங்கள்" என்று தலைப்பிடப்பட்டு இருந்தது.[1] ஆனால், அறியப்பட்ட மிகப்பழைய வடிவம் 1888 இல் வெளியான ஒரு செருமன் அஞ்சலட்டை ஆகும்.[2] 1930 இல், எட்வின் போரிங் என்பவர், ஆய்வுக் கட்டுரை ஒன்றில் இப்படத்தை வெளியிட்டு உளவியலாளரிடையே அறிமுகப்படுத்தினார். அப்போதிருந்து இப்படம் பாடப் புத்தகங்களிலும், சோதனை ஆய்வுகளிலும் இடம்பெற்றன.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "My wife and my mother-in-law. They are both in this picture – find them". Prints & Photographs Online Catalog. Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 9 October 2011.
  2. Weisstein, Eric W. "Young Girl-Old Woman Illusion". MathWorld. பார்க்கப்பட்ட நாள் 9 October 2011.
  3. Botwinick, Jack (June 1961). "Husband and Father-in-Law—A Reversible Figure". The American Journal of Psychology 74 (2).