எப்டாசார்ட்டோரைட்டு
எப்டாசார்ட்டோரைட்டு (Heptasartorite) என்பது Tl7Pb22As55S108 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரிய வகைக் கனிமமான[2] இது சார்டோரைட்டு ஓரின வரிசைத் தொடர் கனிமங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது[1]. சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட கனிமங்களான என்னியசார்ட்டோரைட்டு மற்றும் என்டெகாசார்ட்டோரைட்டுடன் எப்டாசார்ட்டோரைட்டு தொடர்பு கொண்ட கனிமமாக விளங்குகிறது[3][4]. இம்மூன்று கனிமங்களுமே சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த லெங்கென்பேச்சு கல் சுரங்கத்திலிருந்து கிடைக்கின்றன. இச்சுரங்கத்தில் தாலியம் கனிமங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன[5]. ஈடனார்டெரைட்டு கனிமமும் அட்சின்சோனைட்டு கனிமமும் எப்டாசார்ட்டோரைட்டின் வேதிப்பண்புகளை ஒத்திருக்கின்றன[6][7].
எப்டாசார்ட்டோரைட்டுHeptasartorite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்பு |
வேதி வாய்பாடு | Tl7Pb22As55S108 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் எப்டாசார்ட்டோரைட்டு கனிமத்தை Hsat[8] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Topa, D., Stroeger, B., Makovicky, E., Berlepsch, P., and Stanley, C., 2015. Heptasartorite, IMA 2015-073. CNMNC Newsletter No. 28, December 2015, 1861; Mineralogical Magazine 79, 1859–1864
- ↑ 2.0 2.1 "Heptasartorite: Heptasartorite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
- ↑ "Enneasartorite: Enneasartorite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
- ↑ "Hendekasartorite: Hendekasartorite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
- ↑ "Lengenbach Quarry, Fäld (Imfeld; Im Feld; Feld), Binn Valley, Wallis (Valais), Switzerland - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
- ↑ "Edenharterite: Edenharterite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
- ↑ "Hutchinsonite: Hutchinsonite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.