சோலைசாமி திருக்கோவில், எப்போதும்வென்றான்

(எப்போதும் வென்றான் சோலை சாமி கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சோலைசாமி திருக்கோவில் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் எப்போதும்வென்றான் கிராமத்தில் அமைந்துள்ளது.

சோலை சாமி திருக்கோயில்
பெயர்
பெயர்:சோலை சாமி திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:எப்போதும்வென்றான்
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சோலையப்பன், சோலைச்சாமி
உற்சவர்:சோலைச்சாமி
சிறப்பு திருவிழாக்கள்:சித்திரை 18 ஆம் தேதி ஜீவ சமாதி அடைந்த நாள் பௌர்ணமி பூசை, தை 5 அன்று பிறந்த நாள் பூசை

கோவில் வரலாறு தொகு

இக்கோயில் சித்தர் சோலையப்பன் என்பவரின் ஜீவ சமாதிமேல் அமைந்துள்ள கோவில் என்றும், சோலையப்பன் என்னும் வீரனின் நினைவாக கட்டப்பட் கோயில் என்றும் இரு வேறு கருத்துகள் கூறப்படுகிறது.

சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இங்கு குடியமர்ந்த ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், தங்களுக்கு என்று தனித்து ஒரு பகுதியை ஏற்படுத்தி வாழ்ந்து வந்தனர். இவர்களில் சோலப்பன் என்பவர் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில், பாண்டிய மன்னர் ஒருவருக்கு போர்க்காலத்தில் உதவி செய்து வெற்றிக்கு உதவி வந்ததாகவும், எனவே “எப்போதும் வென்றான் சோலப்பன்” என்று பாண்டிய மன்னரால் பாராட்டப்பட்டான். பாண்டிய மன்னன் வழங்கிய நற்பெயரால் இந்த ஊருக்கு எப்போதும் வென்றான் என்கிற பெயர் ஏற்பட்டது என்றும், பின்னர் சோலப்பன் போர் ஒன்றில் இறந்து விட அவரை ராஜகம்பலம் சாதியினர் குல தெய்வமாக வழிபடத் தொடங்கினர். இங்குள்ள தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் சாதியினருக்கும் இந்த சோலைசாமியே குல தெய்வமாக இருக்கிறார் .

விழாக்கள் தொகு

  • இக்கோவிலில் ஆடி மாதம் 18 ஆம் தேதி முதல் நடைபெறும் மூன்று நாள் திருவிழாவில் முதல் நாள் ராஜகம்பளம் சாதியினர் சார்பிலும் இரண்டாவது நாள் அருந்ததியர் சாதியினர் சார்பிலும், மூன்றாவது நாளில் இருவரும் சேர்ந்தும் திருவிழாவினை நடத்துகிறார்கள். இங்கு அருந்ததியர் சாதியினர் சோலையப்பர் சாமிக்கு அசைவ உணவுகளை படைத்து, குறிப்பாக பன்றி இறைச்சி படைப்பது இக்கோவிலில் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 18 ஆம் தேதி ஜீவ சமாதி அடைந்த நாள் தமிழ்நாட்டின் பல பகுதியிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சிறப்பு பூசை நடத்தப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 5 ஆம் தேதி அவரின் பிறந்த நாள் அன்றும் சிறப்பு பூசை நடத்தப்படுகிறது.

படங்கள் தொகு

வெளி இணைப்பு தொகு