எப்ரிமோவைட்டு

சல்பேட்டுக் கனிமங்கள்

எப்ரிமோவைட்டு (Efremovite) என்பது (NH4)2Mg2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இதுவோர் அசாதாரணமான அம்மோனியம் சல்பேட்டுக் கனிமமாகும். வெண்மை நிறம் முதல் சாம்பல் நிறம் வரை இது கனசதுரப் படிகங்களாகக் காணப்படுகிறது [3]. எரியும் நிலக்கரி குவியல்களில் காணப்படும் சல்பேட்டு மேல் ஓடுகளின் பகுதிக் கூறாக இந்த நீரிலி சல்பேட்டு கனிமம் தோன்றுகிறது. நீருறிஞ்சும் இக்கனிமம் ஈரக் காற்றில் வெளிப்படும் போது மெல்ல நீரேற்று வடிவ பௌசிங்கௌல்டைட்டு என்ற சல்பேட்டுக் கனிமமாக மாறுகிறது [4][5].

எப்ரிமோவைட்டு
Efremovite
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(NH4)2Mg2(SO4)3
இனங்காணல்
நிறம்வெண்மை மற்றும் சாம்பல்
படிக இயல்புசமநிலை மணிகள் மற்றும் ஓடுகள்
படிக அமைப்புகனசதுரப் படிகங்கள்
பிளப்புஇல்லை
முறிவுசமமற்றது
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுபளபளப்பானது
ஒளிஊடுருவும் தன்மைஒளி ஊடுறுவும் அல்லது ஒளிபுகாது
ஒப்படர்த்தி2.52 (கணக்கீடு)
ஒளியியல் பண்புகள்சமவியல்பு
ஒளிவிலகல் எண்n = 1.550
Alters toநீருறிஞ்சும்
மேற்கோள்கள்[1][2][3]

இது 1989 இல் உருசியாவில் உள்ள தெற்கு யூரல் மலைப்பகுதியின் செலியபின்சிக் நிலக்கரிப் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. உருசிய நிலவியாலாளர் அண்டோனோவிச்சு யெப்ரிமோவின் (1907-1972) பெயர் இக்கனிமத்திற்கு சூட்டப்பட்டது. மேலும் ஐரோப்பாவின் பல்வேறு நிலக்கரி சுரங்கப் பகுதிகளிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது [2]. பௌசிங்கௌல்டைட்டு, மாசுகாக்னைட்டு, இயற்கை கந்தகம், கிளாடுனோவைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து எப்ரிமோவைட்டு கிடைக்கிறது [3].

மேற்கோள்கள் தொகு

  1. Efremovite, Webmineral.com
  2. 2.0 2.1 வார்ப்புரு:Mindat
  3. 3.0 3.1 3.2 Handbook of Mineralogy
  4. Chesnokov B. V. and Shcherbakova E. P. 1991: Mineralogiya gorelykh otvalov Chelyabinskogo ugolnogo basseina - opyt mineralogii tekhnogenesa. Nauka, Moscow
  5. Jambor J. L. and Grew E. S. 1991: New mineral names. American Mineralogist, 76, pp. 299-305
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்ரிமோவைட்டு&oldid=2659660" இலிருந்து மீள்விக்கப்பட்டது