எமிலி இரைசு

எமிலி இரைசு (Emily Rice) நியூயார்க் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஆவார். இவர் தழ் பொருண்மை வான்பொருள்களின் வளிமண்டல இயல்புகள் ஆய்வுக்கான அறிவியல் பங்களிப்புகள் மட்டுமன்றி, வானியல் சார்ந்த மக்கள் பரப்புரைத் திட்டங்களுக்காகப் பெயர்பெற்றவர். இவர் STARtorialist எனும் பெயரில் வானியல் மையப்படுத்திய வலைப்பதிவின் இணைநிறுவனர். இவர் Tap எனும்மக்கள் பரப்புரை வானியல் தொடரின் ஓம்புநர். இவர் வானியலுக்கான ஒலி; ஒளிக்காட்சிப் படிமப் படைப்பாளர். இவர் இப்போது நியூயார்க் நகர அமெரிக்க இயற்கை வரலாற்ரு அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி இணையராக உள்ளார்.[1] இவர் இப்போது நியூயார்க் கேடன் கோளரங்கில் மக்கள் பரப்புரையாளராகவும் உள்ளார்.[1][2]

கல்வி

தொகு

இவர் பிட்சுபர்கு பல்கலைக்கழகத்தில் பயின்று இரண்டு கலையிளவல் பட்டங்களைப் பெற்றார். இவற்றில் ஒன்று இயற்பியலிலும் வானியலிலும் பெற்ற புலமை சார்ந்தது; அடுத்தது, செருமன் மொழிப் பட்டமாகும். இவர் இளவல் பட்டங்களைப் பெற்றதும் இலாசு ஏஞ்சலீசு சென்று , அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூதறிவியல் பட்டமும் பின்னர் முனைவர் பட்டமும் பெற்றார்.[3] இவரது மூதறிவியல் பட்ட ஆய்வுரை அக்குவிலா விண்மீன் குழுவில் உள்ள இளம் விண்மீன் கொத்தின் விண்மீன்களின் பான்மைகளைப் பற்றியதாகும்.[4] இவரது ஆய்வுரையின் முடிவுகள், இலிசா பிராக்டோ வின் உயர்பிரிதிறக் கதிர்நிரல்களைத் தழுவியதாகும். இவை 2006 இல் வானியற்பியல் இதழிலும் வெளிவரவுள்ள உருவாக்க விண்மீன்கள் வாட்டாரங்கள் கையேட்டிலும் வெளியிடப்பட்டுள்ளன.[4] இவர் தன் முனைவர் பட்டத்துக்காக, இவர் பழுப்புக் குறுமீன்கள் சார்ந்த வளிமண்டலங்களின் இயற்பியல் பண்புகளை ஆய்வு செய்தார். இவற்றுக்கான அண்மைப் படிமத்தின் அகச்சிவப்புக் கதிர்நிரல்சர் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.[4] இவர் தன் முனைவர் பட்ட்த்தை முடித்ததும், இவர் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் புறவெளிக்கோள் குழுவில் முதுமுனைவர் பட்ட இரெபெக்கா ஓப்பனீமர் ஆய்வுநல்கையில் ஆய்வு செய்தார்.[2][4]

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் இப்போது சுட்டேட்டன் கல்லூரி பொறியியல், இயற்பியல் துறையில் புல உறுப்பினராக உள்ளார். இக்கல்லூரி நிய்யுயார்க் நகரப் பல்கலைக்கழகத்தின் பகுதியாகும்.[5] இவர் அங்கே உதவிப்பேராசிரியராக பணிபுரிவதோடு, நியூயார்க் நகரப் பழுப்புக் குறுமீன்கள் ஆராய்ச்சிக் குழு நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார்.[5] இவரது ஆய்வு நம் பால்வெளியில் (பால்வழியில்) உள்ள தாழ்பொருண்மை வான்பொருட்களாகிய பழுப்புக் குறுமீன்கள், பெரும் புறக்கோள்கள் ஆகியவற்றின் இயல்புகளை விவரிக்க அகச்சிவப்புக் கதிர்கள் அண்மிய கதிர்நிரல்களில் முதன்மையாகக் கவனம் குவிக்கிறது. இவர் விண்மீன், கோள் அமைப்புகளின் உருவாக்க இயங்கமைப்புகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்கிறார்.[2][5] இவர் தன் பணிகளை பிறரோடு இணைந்து 30 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[6] இவர் தொடக்கநிலை வானியல் பாடங்களில் பயன்படுத்த அறிமுக வானியல் ஆய்வு செய்முறைகளைக் கருத்து சார்ந்த அணுகுமுறையில் பிறரோடு இணைந்து வடிவமைத்து வெளியிட்டுள்ளார.[6]

இவர் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி இணையராக தொடர்ந்து ஈடுபட்டும் அடிக்கடி கேடன் கோளரங்கில் கோளரங்கு அறிமுகப்படுத்தியும் மிகவும் புகழ் ஈட்டியுள்ளார்.[2]

இவருக்கு 2015 இல் கியூனி (CUNY) வாழ்வியல், அறிவியல் சார்ந்த கல்விக்கழகத்தில் இருந்து இவரது உயர்புலமைக்காக வாசர் விருது வழங்கப்பட்டது.[6]

மக்கள் பரப்புரை

தொகு

தன் ஆராய்ச்சிப் புலத்தில் ஏராளமான பங்களிப்புகளை வழங்கியிருந்தாலும், இவர்மக்கள் அறிவியல் பரப்புரைப்பணிகளில் பெருவெற்ரி அடைந்துள்ளார் இவர். STARtorialist எனும் பெயரில் வானியல் மையப்படுத்திய வலைப்பதிவினை Summer Ash எனும் வானியலை மையப்படுத்திய நயப்பு வலைப்பதிவுடன் இணைந்து வடிவமைத்துள்ளார் இதன் நோக்கம்"அறிவியல் நயப்புடன் கலக்கும்போது அறிவியலாளரும் நயத்தகும் தன்மை பெறுவர்" என்பதாகும்.[2][5][6][7]

இவர் நியூயார்க் அரங்குகளில் கார்ல் சாகன் நினைவாக மக்கள் அறிவியல் கூட்டங்களை அணிதிரட்டி, விருந்தோம்பி, மோன்க்கர் கார்ல் சாகன் அறிவியல் உரைகளை வழங்கியுள்ளார். இவை இவரது டேப் வானியல் தொடரின் பகுதியாக அமைந்தனவாகும்.[2][5][6][8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hanson, Alex. "Astrophysics, Fashion, and DJ Carly Sagan: An Interview with Emily Rice"[தொடர்பிழந்த இணைப்பு], HERpothesis, 20 January 2016. Retrieved on 5 November 2016.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Staff Directory - Emily Rice". American Museum of Natural History.
  3. "Faculty Directory - Emily Rice". City University of New York. Archived from the original on 2016-04-26. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
  4. 4.0 4.1 4.2 4.3 "உயர்பிரிதிறக் கதிர்நிரல்கள்". UCLA Astronomy Department. பார்க்கப்பட்ட நாள் 5 November 2016.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Faculty Alpha List - Emily Rice". City University of New York. Archived from the original on 2016-04-26. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "30articles". StarTalk Radio with Neil DeGrasse Tyson.
  7. http://www.startorialist.com/ Author: Emily Rice and Summer Ash
  8. "டேப் வானியல்". Astronomy on Tap.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலி_இரைசு&oldid=3640739" இலிருந்து மீள்விக்கப்பட்டது