எம்எம்ஆர் தடுப்பு மருந்து
எம்எம்ஆர் தடுப்பு மருந்து (எம்எம்ஆர் தடுப்பூசி, MMR vaccine, இதன் லத்தீன் பெயர்களை அடிப்படையாக கொண்டு எம்பிஆர் தடுப்பு மருந்து MPR vaccine எனவும் அழைக்கப்படுகிறது) தட்டம்மை தாளம்மை மணல்வாரிக்கு எதிராக போடப்படுவதாகும். இம்மருந்தில் ஆற்றல் குறைவான உயிருள்ள மூன்று நோய்களின் தீநுண்மம் கலவையாக இருக்கும். இம்மருந்து ஊசி மூலம் செலுத்தப்படக்கூடியது. தட்டம்மைக்கான மருந்தை முதலில் மௌரிச் இல்மேன் என்பவர் மெர்க் நிறுவனத்தில் பணியாற்றிய போது கண்டார்.[1]
தட்டம்மைக்கான தடுப்பு மருந்து உரிமம் மூலம் முதலில் 1963 ஆம் ஆண்டு பொது சந்தையில் கிடைத்தது, 1968ஆம் ஆண்டு மேலும் முன்னேறிய மருந்து அறிமுகமாகியது, தாளம்மைக்கான மருந்து 1967 ஆம் ஆண்டும் மணல்வாரிக்கான மருந்து 1969 ஆம் ஆண்டும் கிடைக்க தொடங்கின. மூன்று தடுப்பு மருந்துகளும் கலந்து 1971 ஆம் ஆண்டு முதல் எம்எம்ஆர் என்ற பெயரில் தரப்படுகிறது.[2]
இம்மருந்து பொதுவாக ஒரு வயதுள்ள குழந்தைகளுக்கு முதல் முறை வழங்கப்படுகிறது. இரண்டாவது முறை பள்ளிக்கு செல்லும் முன் வழங்கப்படுகிறது. முதல் முறை வழங்கப்படும்போது குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வருவதில்லை அதனாலேயே இரண்டாவது முறை வழங்கப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு இம்மருந்துக்கு அமெரிக்காவில் உரிமம் வழங்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு இரண்டாவது முறை மருந்து வழங்கும் முறை அறிமுகமானது.[3] உலகம் முழுவதும் 60 இக்கும் மேற்பட்ட நாடுகள் இதை பயன்படுத்துகின்றன. மெர்க் எம் எம் ஆர் என்றும் கிலாக்சோ இசுமித்க்லைன் பையோலாசிகல் பிரியோரிக்ச் என்றும் செரெம் இந்திய கழகம் டிரெசிவக்' என்றும் சனோபி பாசுடர் டிரிமோவாக்ச் என்றும் இதை விற்கின்றன.
இம்மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாயினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சில பெரியவர்களும் தரப்படுகிறது. சில எச்.ஐ.வி நோயாளிகளுக்கும் இம்மருந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தரப்படுகிறது.[4][5]
குறிப்புகள்
தொகு- ↑ Offit PA (2007). Vaccinated: One Man's Quest to Defeat the World's Deadliest Diseases. Washington, DC: Smithsonian. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-122796-X.
- ↑ Measles: Questions and Answers, Immunization Action Coalition.
- ↑ Rubella. 363. 2004. பக். 1127–37. doi:10.1016/S0140-6736(04)15897-2. பப்மெட்:15064032.
- ↑ "Case 4: Discussion - Appropriate Vaccinations - Initial Evaluation - HIV Web Study".
- ↑ "Measles, Mumps, and Rubella -- Vaccine Use and Strategies for Elimination of Measles, Rubella, and Congenital Rubella Syndrome and Control of Mumps: Recommendations of the Advisory Committee on Immunization Practices (ACIP)".