எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் ஹோட்டல், சூதாட்டங்கள் நடைபெறும் ஹோட்டல் வகையினைச் சேர்ந்தது. இது நெவாடாவின், பாராடைஸில் உள்ள லாஸ் வேகஸ் ஸ்ட்ரிப்பில் அமைந்துள்ளது. அறைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஹோட்டல்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் ஹோட்டல் உள்ளது. அத்துடன் அமெரிக்காவின் மிகப்பெரிய ஹோட்டல்களின் வரிசையில் முதலிடத்தில் இந்த ஹோட்டல் இடம்பிடித்துள்ளது. 1993 ஆம் ஆண்டில் எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் ஹோட்டல் திறக்கப்பட்டபோது உலகின் மிகப்பெரிய ஹோட்டல்களின் வரிசையில் முதலிடத்தில் இருந்தது.
MGM Grand Las Vegas | |
---|---|
Location | Paradise, Nevada |
Address | 3799 South Las Vegas Boulevard |
Opening date | திசம்பர் 18, 1993 |
Theme | Art Deco Hollywood |
No. of rooms | 6,852 |
Total gaming space | 171,500 sq ft (15,930 m2) |
Permanent shows | Brad Garrett's Comedy Club David Copperfield Jabbawockeez Kà |
Signature attractions | MGM Grand Garden Arena Hakkasan CSI: The Experience TopGolf |
Notable restaurants | Joël Robuchon L'Atelier de Joël Robuchon Hakkasan Emeril's Michael Mina's Pub 1842 Craftsteak Wolfgang Puck Fiamma Shibuya |
Casino type | Land-based |
Owner | MGM Resorts International |
Previous names | Marina MGM-Marina |
Years renovated | 1996–1998, 2005, 2012, 2017–2019 |
ஆள்கூறுகள் | 36°06′08″N 115°10′10″W / 36.1022°N 115.1695°W |
Website | mgmgrand |
இது எம்ஜிஎம்[1] ரிசோர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் இந்த ஹோட்டலின் உரிமை மற்றும் செயல்பாட்டு அதிகாரங்கள் உள்ளன. இந்த ஹோட்டலின் 30 வது அடுக்கு மாடி 293 அடி உயரத்தில் (89 மீட்டர்) அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஐந்து வெளிப்புற நீச்சல் குளங்கள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவை அடங்கும். இவை மட்டும் சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவினை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. சுமார் 3,80,000 சதுர அடிகள் (35,000 சதுர மீட்டர்கள்) பரப்பளவில் எம்ஜிஎம் கிராண்ட் கார்டன் ஏரினா, கிராண்ட் மருத்து நீருற்று மற்றும் பெரிய மாநாட்டு மையம் போன்றவை அமைந்துள்ளன.
இவை தவிர பல்வேறு வகையிலான கடைகள், இரவு நேர கூட்ட அரங்குகள், உணவகங்கள் மற்றும் மிகப்பெரிய சூதாட்ட அரங்கு போன்றவையும் இந்த ஹோட்டலில் அமைந்துள்ளது. இவை சுமார் 1,71,500 சதுர அடிகள் (15,930 சதுர மீட்டர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளன.
அருகருகே அமைந்துள்ள இரு இணைப்புகளுக்கு தெருவழியாக பாதசாரிகளை கடக்கவிடாமல், தலைக்கு மேல் உருவாக்கப்பட்ட பாலம் வழியே செல்லுமாறு உருவாக்கியுள்ளனர்.
மெரினா ஹோட்டல்
தொகுமெரினா ஹோட்டல்[2] 3805 லாஸ் வேகாஸ் பௌலேவார்ட்டில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல், 1975 ஆம் ஆண்டில் 714 அறைகள் கொண்ட ஹோட்டல் மற்றும் சூதாட்ட மையமாக திறக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டில், கிர்க் கெர்கோரியன் எம்ஜிஎம் கிராண்டினை நிறுவுவதற்காக மெரினா ஹோட்டல் மற்றும் டிரோபிகானா கவுன்ட்டி கிளப் இரண்டையும் வாங்கினார். அப்போது மெரினா ஹோட்டலானது, எம்ஜிஎம்-மெரினா ஹோட்டல் என்று அழைக்கப்பட்டது. மெரினா ஹோட்டல் நவம்பர் 30, 1990 இல் மூடப்பட்டு, அக்டோபர் 7, 1991 இல் புதிய சூதாட்ட ஹோட்டல் கட்டிடத்திற்காக, மெரினா ஹோட்டலின் அடிப்பகுதி அழிக்கப்பட்டது. முதன்மை ஹோட்டல் கட்டிடத்தின் மேற்குப் பகுதியின் முடிவில் மெரினா ஹோட்டல் கட்டிடத்தின் பகுதிகள் இன்றளவும் எஞ்சியுள்ளன.
பட வரலாறு
தொகுமிகப்பெரிய ஹோட்டல் என்பதால் பல்வேறு திரைப்படங்களில் எம்ஜிஎம் கிராண்ட்[3] லாஸ் வேகாஸ் ஹோட்டல் விதவிதமான காட்சியமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1. 1996 ஆம் ஆண்டில், குத்துச்சண்டை நகைச்சுவையான கிரேட் வைட் ஹைப் படம். 2. ஓசியன்ஸ் லெவன் படத்தில் டேனி ஓசியன் கொள்ளையடிக்கும் சூதாட்ட அரங்குகளில் எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் ஹோட்டலும் ஒன்று. லென்னொக்ஸ் லுவிஸ் மற்றும் வ்லாடிமிர் க்ளிட்ஷ்க்ப் இடையே நடைபெறும் உலக வீரனுக்கான குத்துச்சண்டையில் மேடையில் காட்டப்படும்படியான காட்சி. 3. வேகாஸ் வேகாஷன்ஸ் படத்தின் இறுதிக் காட்சியில் கிளார்க் க்ரிஸ்வோல்ட் மற்றும் அவரது குடும்பம் கெனோ விளையாட்டினை விளையாடும்போது காட்டப்படும். 4. எம்ஜிஎம் கிராண்ட் மற்றும் அதன் பழைய நுழைவு வாயில், புது லாஸ் வேகாஸாக கேஸினோ திரைப்படத்தில் காட்டப்பட்டது. இப்படம் 1995 இல் வெளியானது. 5. ‘த அமேசிங்க் ரேஸ் 15’ மற்றும் ‘த அமேசிங்க் ரேஸ் 24’ ஆகிய படங்களில் எம்ஜிஎம் கிராண்ட் காட்சியளிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்
தொகுஹோட்டலின் அறைகள் பல்வேறு கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மை ஹோட்டல் கட்டிடம் 5044 அறைகளைக் கொண்டுள்ளது. எம்ஜிஎம் கிராண்டின் ஸ்கைலாஃப்ட்ஸ், ஏஏஏ ஐந்து வைர மதிப்பு[4] கட்டிடம், ஃபோர்ப்ஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகிய இரண்டும் முதன்மை கட்டிடத்தின் உயர்மாடிகளில் உள்ளன. எம்ஜிஎம் கிராண்டில் மாளிகைகளாக சுமார் 29 கட்டிடங்கள் மிக முக்கியமானவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் ஹோட்டல் வசதிகள்
தொகுஅடிப்படை வசதிகள்
தொகுகம்பியில்லா இணையச் சேவை, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், பார், அறைச் சேவை, இணையம், வணிக மையம், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி செய்யும் இடம் போன்றவை இங்கு அளிக்கப்படும் அடிப்படை வசதிகள் ஆகும்.
உணவு மற்றும் குளிர்பானங்கள்
தொகுஇங்கு பார் மற்றும் உணவக வசதிகள் உள்ளன.
வணிக சேவைகள்
தொகுவணிக மைய வசதிகள் வழங்கப்படுகிறது.
தனிப்பட்ட சேவைகள்
தொகு24 மணிநேர வரவேற்பறை, அறைச் சேவை மற்றும் பண பரிமாற்றம் போன்ற வசதிகள் இங்கு வழங்கப்படுகின்றன.
ஹோட்டல் வசதிகள்
தொகுபரிசுப்பொருட்களுக்கான கடை மற்றும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் இங்கு அளிக்கப்படும் வசதிகளாகும்.
மறு உருவாக்க வசதிகள்
தொகுசூதாட்டம், உடற்பயிற்சி செய்யுமிடம், இரவு நேர கூட்ட அறைகள், மருத்து நீருற்று, அழகுக்கலை மற்றும் முடிதிருத்துமிடம், உடற்பிடிப்பு செய்யுமிடம், உடல்நிலை நலத்திற்குரிய அரங்குகள், வணிக வளாகம், கடைவீதி போன்ற வசதிகள் இங்கு அளிக்கப்படுகின்றன.
பயணச் சேவைகள்
தொகுவாகனங்கள் நிறுத்துமிடம், இலவச நிறுத்துமிடம், கார் நிறுத்தும் பணியாட்கள் ஆகிய வசதிகள் இங்கு வழங்கப்படுகின்றன.
இதர வசதிகள்
தொகுவெளிப்புற குளம் வசதி இதர வசதிகளில் அளிக்கப்படுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ "History of the MGM Grand Hotel". earlyvegas.com. 18 October 2008. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
- ↑ "The Marina Hotel was Never Destroyed". vegastodayandtomorrow.com. 18 October 2008. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
- ↑ "Hotel MGM Grand Facilities". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
- ↑ "MGM Grand Reviews". lasvegas.com. Archived from the original on 7 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.