எம். ஆர். கிருஷ்ணா

இந்திய அரசியல்வாதி

எம். ஆர். கிருஷ்ணா (M. R. Krishna) என்பவர் (பிறப்பு 1924 திரிமல்கேரியில்-இறப்பு 12 மே 2004[1]) இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தினைச் சார்ந்த கிருஷ்ணா கரீம்நகர் மக்களவை தொகுதியிலிருந்து முதலாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். பின்னர் கரீம்நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது மக்களவை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் இவர் பெடப்பள்ளியில் மக்களவை தொகுதியிலிருந்து 3ஆவது மற்றும் 4ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] கிருஷ்ணா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக 1972 முதல் 1982 வரை பணியாற்றியுள்ளார். இவர் பட்டியல் இனத்தவர் ஒருங்கிணைப்பின் உறுப்பினராக (பின்னாளில் இந்தியக் குடியரசுக் கட்சி) இருந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. https://indiankanoon.org/doc/1296638/
  2. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  3. "Members : Lok Sabha".
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._கிருஷ்ணா&oldid=3995394" இலிருந்து மீள்விக்கப்பட்டது