எம். கே. ஆத்மநாதன்

எம். கே. ஆத்மநாதன் (இறப்பு: சூலை 15, 2013, அகவை 88) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் ஆவார். 120 இற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.'ரத்தபாசம்’ படத்தில் 'பாதகம் செய்வது ஏனோ? ரத்தபாசம் அழிப் பது ஏனோ?’ பாடல் மூலம் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். மல்லிகா’, 'நாடோடி மன்னன்’, 'களத்தூர் கண்ணம்மா’, 'அல்லி’, 'விக்ரமாதித்யன்’, 'மகேஸ்வரி’, 'எதையும் தாங்கும் இதயம்’ உள்பட 75 படங்களுக்கு மேல் பாடல் எழுதியிருக்கிறார். 1978-ம் வருடம் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

எழுதிய சில பாடல்கள் தொகு

  • தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு .. திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு (அமரதீபம்)
  • விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே,
  • ஆண்டவன் ஒருவன் இருக்கிறான்,
  • தடுக்காதே என்னை தடுக்காதே,
  • குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா
  • வண்ண மலரோடு கொஞ்சும் - நாட்டுக்கொரு நல்லவள் 1959 - சீர்காழி + பி.சுசீலா - இசை :மாஸ்டர் வேணு
  • ஆனந்த நிலை பெறுவோம் - ராஜா ராணி (1956)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._ஆத்மநாதன்&oldid=3785061" இலிருந்து மீள்விக்கப்பட்டது